Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடும்ப நலன் ஓகே... உங்கள் உடல்நிலையைச் சரியாக வைத்திருக்கிறீர்களா பெண்களே?! #WorldHealthDay

''என் ஹஸ்பண்டை டெய்லி வாக்கிங் போகச் சொல்லியிருக்கேன். உடம்புல கவனமா இருக்கணும்ல', 'என் பையன் ஆரோக்கியத்துக்காக சத்துமாவுக் கஞ்சி கொடுக்கிறேன்' என்று கணவர், குழந்தைகளின் உடல்நலனுக்காக மாய்ந்து மாய்ந்து உழைக்கும் பெண்கள், தன் உடல்நலனில் அதே அளவிலான அக்கறையைக் காட்டுகிறார்களா என்றால்... இல்லை என்கிற பதில் ஒவ்வொரு பெண்ணின் மனசுக்கும் தெரியும். இன்று உலக ஆரோக்கிய தினம். ஒவ்வொரு பெண்ணும் குடும்ப நலன் தவிர, தன் உடல்நலனில் எதையெல்லாம் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும், என்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நிவேதா. 

உடல் எடையில் கவனம்!

உடல் எடையில் நிதானம் இழக்கத் தொடங்கினால் தைராய்டில் ஆரம்பித்து பீரியட்ஸ் பிரச்னைகள் வரை பல உடல்நலக்கேடுகளைச் சந்திக்க வேண்டியது வரும். உங்கள் உயரத்துக்கேற்ற எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப உடலை மெயின்டெயின் செய்யுங்கள்.

டாக்டர் நிவேதாடீன் ஏஜ் தடுப்பூசி:

பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்னைகளில் ஒன்று செர்விகல் கேன்சர். 10 முதல் 15 வயதுக்குள் பெண் குழந்தைக்கு செர்விகல் கேன்சருக்கான தடுப்பூசியைப் போட்டுவிட்டால், பின்னாளில் இந்தப் பிரச்னை வராமல் தடுத்துவிடலாம்.

பீரியட்ஸ் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க...

வயதுக்கு வந்த 2 அல்லது 3 வருடங்கள் வரை வரும் ஒழுங்கற்ற பீரியட்ஸ் நார்மலான விஷயம்தான். அதன் பிறகு சினைப்பையில் கட்டிகள் வருவதற்கும், ஒழுங்கற்ற பீரியட்ஸுக்கும் நம் உடல் எடை மிக முக்கிய காரணம். வயதுக்கு வந்த நாளிலிருந்தே இரும்புச் சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட வேண்டும். அப்போதுதான் இருபதுகளில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். 

திருமணத்துக்குப் பிறகு...

அம்மா வழியிலோ அல்லது அப்பா வழியிலோ உங்கள் குடும்ப பாரம்பர்யத்தில் யாருக்காவது செர்விகல் கேன்சர் இருந்திருந்தால், திருமணம் முடிந்ததில் இருந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை செர்விகல் கேன்சருக்கான 'பாப் ஸ்மியர்' பரிசோதனையைச் செய்துவிடுங்கள். மற்ற பெண்களும் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ளலாம். 

பெண்

குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறீர்களா? 

சத்தில்லாத உணவுகளைச் சாப்பிடுவதால், பெண்களில் நிறையப் பேருக்கு ஃபாலிக் ஆசிட் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால், குழந்தை பெற்றுக்கொள்கிற ஐடியாவில் இருக்கிறீர்கள் என்றால், முன்கூட்டியே டாக்டரிடம் கேட்டு ஃபாலிக் ஆசிட் மாத்திரையைச் சாப்பிட ஆரம்பியுங்கள்.  

குழந்தை பேற்றுக்குப் பிறகு...

 ஒன்றோ, இரண்டோ குழந்தைப் பெற்ற பிறகு, உங்களுக்கு வசதியான குடும்பக்கட்டுபாடு முறையைக் கண்டிப்பாக ஃபாலோ செய்யுங்கள். அபார்ஷன் செய்து அவஸ்தைப்படாதீர்கள். பொதுவாக அபார்ஷனுக்குப் பிறகுதான் பெண்களின் ஆரோக்கியம் அடியோடு காணாமல் போகிறது. எலும்புக்கு வலு சேர்க்கும் உணவுகளை முக்கியமாக சத்துமாவு கஞ்சியை உணவு வேளையில் எடுத்துக்கொள்ளுங்கள்.

பெண்

நாற்பதுகளில் நுழைந்து விட்டீர்களா? 

வாரத்துக்கு மூன்று நாள், 40 நிமிடங்கள் வேக நடைப்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அதிலும் காலையில் நடைப்பயிற்சி செய்தீர்களென்றால், சுத்தமான ஆக்ஸிஜனும் உடம்புக்குக் கிடைத்து விடும். ரத்த அழுத்தம், டயபடீஸ் இருப்பவர்கள் மாதம் ஒரு முறை கட்டாயம் அவற்றை செக் செய்து கன்ட்ரோலுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். இந்த வயதில் சினைப்பை, கருப்பை மற்றும்  மலக்குடல் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்துபார்த்து விடுவது நல்லது. 

மெனோபாஸுக்குள் நுழைந்துவிட்டீர்களா?

மன அழுத்தம், உடல் சோர்வு, திடீரென வியர்த்துக்கொட்டுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் நீங்கள் மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்தச் சமயத்தில் உடல் எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும் என்பதால், 'போன் டென்ஸிட்டி' பரிசோதனையும், வைட்டமின் 'டி' பரிசோதனையும் எடுத்துப் பார்த்துவிடுவது நல்லது. 

ஆஸ்துமா தொல்லைகள் இருக்கிறதா?

 ஆஸ்துமாவால் அவதிப்படும் பெண்கள், நிமோகாக்கல் தடுப்பூசியை போட்டுக் கொள்வது நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement