Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கச்சா எண்ணெய் கலந்த அமெரிக்காவின் மக்டலேனாவும் காவிரி டெல்டாவும்!

மிழக காவிரி போல அது அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் ஓடும் நதி. அந்த நதியில் தனக்கான மரணத்தை நோக்கி தண்ணீருக்குள் மீன் துடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் கீழுமாக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி தண்ணீரில் பல்டியடித்துப் போராடிப் பார்க்கிறது. இறுதியில் அது முடியாமல் போனதால் துடிக்கத் துடிக்க மரணிக்கிறது. துடித்து இறந்தது இந்த ஒரு மீன் மட்டுமல்ல. இதைப் போன்ற 2,400-க்கும் மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்களும்தான். நாம் குடிக்கும் நீரில் விஷம் கலந்தால் நாம் உயிர் போகத்தானே செய்யும். அதேபோல அவற்றின் வாழ்விடங்களான அந்நதிநீரில் 24 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய்யைக் கலந்தால் அவை மரணிக்காமல் என்ன செய்யும்?

காவிரியும் கச்சா எண்ணெய்யும்

Photo - Smithsonian Magazine

கடந்த பிப்ரவரி மாதம் கொலம்பியாவில் உள்ள மக்டலேனா நதியில்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள முக்கியமான நதிகளில் ஒன்று, மக்டலேனா. பல ஏக்கர் கணக்கான நிலங்களுக்கு தண்ணீரைக் கொடுத்தும், பல லட்சக்கணக்கான மக்களுக்கும், நீர் வாழ் உயிரினங்களுக்கும் ஆதாரமாக நின்ற நதி இன்று முற்றிலும் சீரழிக்கப்பட்டு நிற்கிறது. இனி அந்த நீரில் உயிரினங்கள் வசிக்கப் பல ஆண்டுகளாகும். அமெரிக்காவில் இருக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இச்சூழலியல் மாசுபாட்டால் கொந்தளித்துக் காணப்படுகிறார்கள். நதியில் கச்சா எண்ணெய் கொட்டியவுடன் 550 பேரல்கள் கொட்டியிருக்கிறது என்று அறிவிப்பை வெளியிட்டது, அமெரிக்க அரசு. ஆனால், சுற்றுச்சூழலியலாளர்கள் 24 ஆயிரம் பேரல்கள் கச்சா எண்ணெய் கொட்டியது என்ற வாதத்தை ஆதாரத்துடன் முன்வைத்தனர். மேலும், கச்சா எண்ணெய்யைக் கொட்டிய நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இதுவரை வெளிவந்துள்ள தகவல்படி 2,400 உயிரினங்கள் இறந்துள்ளன. நீர் வாழ் உயிரினங்களையும் மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த முயற்சியால் சில உயிரினங்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மக்டலேனா நதியை மாசுபாட்டிலிருந்து மீட்கப் பல தொழில்நுட்பங்களை முன்னெடுத்து வந்தாலும், எதுவும் பலனளிக்காது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து. 

எண்ணெய் கலந்த நீர்

Photo - Rt news

கச்சா எண்ணெய் எடுக்கும் எகோபெட்ரோல் நிறுவனம் தன்னிடம் இருக்கும் 158 எண்ணெய்க் கிணறுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கச்சா எண்ணெய் வெளியேறியவுடன் நதியின் 8 மைல் தொலைவு வரை கரும்படலமாக ஆயில் கரைபுரண்டு நின்றிருந்திருக்கிறது. அதன் பின்னரே தனது வேலையைத் தாமதமாக அந்நிறுவனமும் அரசும் தொடங்கியிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள் அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பாதிக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்களைப் பிடித்து அவற்றுக்குத் தற்காலிகமான தீர்வை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறார்கள், மருத்துவர்கள். எகோபெட்ரோல் நிறுவனமும் நதியின் குறுக்காக தடுப்புகளை அமைத்து நீரிலிருந்து எண்ணெய்யைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. அங்கு இன்னும் கச்சா எண்ணெய் வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது.

எண்ணெய்யை அகற்றும் பணியில் ஊழியர்கள்

இதேபோலத்தான் தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் 700-க்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி கச்சா எண்ணெய் எடுத்துக் கொண்டிருக்கிறது ஓ.என்.ஜி.சி நிறுவனம். காவிரி டெல்டா மண்டலத்திலே பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்க் கிணறுகளுக்கும், காவிரி ஆற்றுக்கும் வெகு தூரமில்லை. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு நாடு, இந்த விபத்தால் என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டுள்ளது. கடலில் கொட்டிய கச்சா எண்ணெய்யை வாளி கொண்டு அள்ளும் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, எவ்வாறு உடனடி முயற்சிகளை மேற்கொள்ளும் என்று நினைக்கவே மனம் பதறுகிறது. 

இயற்கையிடம் தன்னுடைய முழு பலத்தைக் காட்டினால் அதுவும் தனது முழு பலத்தைக் காட்டத்தானே செய்யும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement