அமேசான் அலுவலகத்துக்கு தினமும் வரும் 6,000 நாய்கள்... எதற்காக? | 6000 Dogs Comes to Amazon Each day

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (16/04/2018)

கடைசி தொடர்பு:10:49 (17/04/2018)

அமேசான் அலுவலகத்துக்கு தினமும் வரும் 6,000 நாய்கள்... எதற்காக?

30 ஆயிரம் பேர் பணிபுரியும் அமேசான் தலைமை அலுவலகத்தில், ஒரு நாளைக்கு 6,000 நாய்கள் வருகை தருகின்றன.

அமேசான் அலுவலகத்துக்கு தினமும் வரும் 6,000 நாய்கள்... எதற்காக?

``அவன் ஒரு அதி சிறப்பான வாழ்வை வாழ்ந்தான். டென்னிஸ் பால் (Tennis Ball) விளையாட்டில் அவனை யாராலும் ஜெயிக்க முடியாது. அவன் ஒரு சாம்பியன். அவன் நம் நிறுவனத்தின்  பல முக்கிய மீட்டிங்குகளில் பங்கெடுத்துள்ளான். இவனை ஒரு முறை பார்த்துவிட்டுப் போகும் யாரும் நிச்சயம் அவனுக்கான ஒரு பரிசோடு தான் அடுத்த தடவை வருவார்கள். அப்படி ஒரு செல்லப்பிள்ளை.
இன்று நம் அலுவலகத்துக்கு ஒவ்வொரு நாளும் 6 ஆயிரம் நாய்கள் கொண்டு வரப்படுகின்றது என்று சொன்னால்... அதற்கான விதை இவன் போட்டது. ரூஃபஸுக்கு (Rufus) நன்றி.

அழகான வாழ்க்கையை வாழ்ந்த திருப்தியோடு, அமைதியான மரணத்தைத் தழுவினான் ரூஃபஸ். அவன் இறந்த தினம் - மே, 27, 2009. 

லவ் யூ ரூஃபஸ்"

அமேஸான் நிறுவனத்திற்கு வரும் நாய்கள்

அமேசான் அலுவலகத்துக்குள் முதன் முதலாக வந்த ரூஃபஸ் எனும் நாய் குறித்து, தங்கள் வலைதளத்தில் இப்படியாகத்தான் பதிவிட்டிருக்கிறது அமேசான். அமெரிக்காவின் சியாட்டிலில் இருக்கும் அமேசான் தலைமை அலுவலகத்தில் மொத்தம் 30 கட்டடங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கட்டடத்துக்கு ரூஃபஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகளவில் நாய்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்கும் மிக சில நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது அமேசான். நாய்களை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், அப்படி அனுமதிக்கப்படும் நாய்களுக்குப் பல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அமேசான். 

அமேஸான்

30 ஆயிரம் பேர் பணிபுரியும் அமேசான் தலைமை அலுவலகத்தில், ஒரு நாளைக்கு 6 ஆயிரம் நாய்கள் வருகை தருகின்றன. 
உலகளவில் கூகுள், சேல்ஸ் ஃபோர்ஸ், மார்ஸ் போன்ற சில நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்துக்குள் நாய்களை அனுமதித்தாலும்கூட, அமேசான் வழங்கும் வசதிகள் வேற லெவல்!

ஒருவர் தன் நாயைக் கொண்டு வர வேண்டுமென்றால், முதலில் தன் மேனேஜரிடமும், தன் டீம் உறுப்பினர்களிடம் அவர்களுக்கு இதனால் பிரச்னை இல்லை என்ற ஒப்புதலைப் பெற வேண்டும். பின்னர், நாய்க்குச் சரியான தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக, நாய் குறித்த தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

அலுவலகத்தின் எந்தக் கட்டடத்துக்குள் நுழைந்தாலும் அங்கு ஓர் அழகான வரவேற்பாளர் உட்கார்ந்திருப்பார். அவருக்கு அருகே "Treat Bucket" என்று ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அது முழுக்கவே நாய்களுக்குப் பிடித்த உணவுகளால் நிரப்பப்பட்டிருக்கும். நாய்கள் வரிசையில் நின்று அதைப் புசிக்கலாம். 

அமேஸான் நாய்கள்

"Treat Bucket"

நல்ல ஆரோக்கியமான, சுவையான உணவை முடித்த பின் சும்மா இருக்க முடியாதல்லவா? எனவே, அது ஓடி, ஆடி விளையாட "Doggie Deck" என்ற இடம். இங்கு நாய்களுக்கான பல விளையாட்டுப் பொருள்கள் இருக்கும். 

நாய்களுக்கான காப்பீடு திட்டத்தையும் ( Pet Insurance)) அமேசான் நிறுவனம் வழங்குகிறது. மேலும், நாய்கள் இறந்துவிடும் பட்சத்தில், சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அதன் உரிமையாளருக்கு `இழப்புத் துயர விடுமுறை' (Bereavement Leave) அளிக்கப்படுகிறது.

அடுத்தது , ஆயிரம் சதுரடியில் நாய்களுக்கென ஒரு பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பெரிய பாறைகள், மரக்கட்டைகள் என நாய்கள் ஏறி, குதித்து விளையாடும் வகையில் பல விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 

நாய் பூங்கா

நாய்களுக்கான பூங்கா...

பல இடங்களில் நாய்களுக்கான பிரத்யேக "Dogs Only Water Fountains" அமைக்கப்பட்டிருக்கின்றன. 

அமேஸான்

"Dogs Only Water Fountains"

நாய்களுக்கான சிறுநீர் கழிக்குமிடம், மலம் கழிக்க தனியாக "Poop Bag Stations" என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

1.அமேசானில் மூன்று பிரபல நாய் இனங்கள் இருக்கின்றன: கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever), லேப்ரடார் ரிட்ரீவர் (Labrador Retriever), லேப்ரடூடல்ஸ் (Labradoodles).


2. நிறுவனத்தில் இருக்கும் நாய்களில் பிரபலமான மூன்று பெயர்கள் இருக்கின்றன: லூஸி (Lucy), பெல்லா (Bella), சார்லி (Charlie). 

இப்படியாக நாய்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது, தேவைகளைக் கண்காணித்து மேம்படுத்துவது என நாய்கள் சம்பந்தமான விஷயங்களை முன்னெடுக்க, நாய்ப் பராமரிப்புக்காகவே அங்கு ஒரு தனிக் குழு இயங்குகிறது. அந்தக் குழுவுக்கு மேனேஜராக இருப்பவர் லாரா ஹிர்ச்ஃபீல்ட் (Lara Hirschfield).

அமேஸான் நாய்கள்

"எங்கள் நிறுவன ஊழியர்கள் பலருக்கும் நாய்கள் வெறும் வளர்ப்புப் பிராணிகள் மட்டுமே கிடையாது. அவர்களுக்கு அவை குழந்தைகள் மாதிரி. ஒருவர் ஒரு அலுவலகத்தில் திறன்பட செயல்பட வேண்டுமென்றால், அந்த அலுவலகச் சூழல் அவருக்குப் பிடித்த மாதிரியானதாக இருக்க வேண்டும். அந்தச் சூழலை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். நாய்களை அனுமதிப்பதால் எங்கள் ஊழியர்கள் மன அழுத்தம் இன்றி வேலை செய்கிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி." என்று சொல்கிறார் லாரா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்