வட கொரிய அதிபர் கிம் ஜாங்குடன் சி.ஐ.ஏ இயக்குநர் சந்திப்பு..!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ இயக்குநர் மைக் பாம்பியா சந்தித்துள்ளார் என்று அமெரிக்கா ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாலும், அணு ஆயுதச் சோதனைகள் தொடர்ச்சியாகச் செய்துவருவதாலும், உலக நாடுகளிலிருந்து வட கொரியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் நீண்ட நாள்களாகப் பகை நீடித்துவருகிறது. இந்த நிலையில், ட்ரம்ப்பை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்த விருப்பத்தை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டார்.

இது, உலக நாடுகளுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கிம் ஜாங் உன் மற்றும் டொனால்டு ட்ரம்ப்பின் சந்திப்பை உலக நாடுகள் எதிர்பார்த்துவருகின்றன. இந்த நிலையில், 'அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ இயக்குநர் மைக் போம்பியா, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை நேரில் சந்தித்தார்' என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், இந்தத் தகவலை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். கிம் ஜாங் உடன் டொனால்டு ட்ரம்ப் சந்திப்பதுகுறித்து முடிவுசெய்ய, இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ராணுவமயமாக்கப்படாத இரு நாடுகளுக்கும் பொதுவான ஓர் இடத்தில் ட்ரம்ப் மற்றும் கிம்மின் சந்திப்பு நடைபெறும் என்றும், ஜூன் மாதத் தொடக்கத்தில் சந்திப்பார்கள் என்றும் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!