ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு..! 57 பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 57 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.

Pic credit: Reuters

ஆப்கானிஸ்தானில், வரும் அக்டோபர் 20-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, புதிய வாக்காளர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை வழங்கும் பணிகளில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், காபுல் நகரின் தாஷ்-இ-பார்சி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த வாக்காளர் பதிவு மையத்தில் நேற்று பிற்பகலில் நுழைந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி அவனது, உடலில் கட்டி வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இந்தத் தாக்குதலில் 57 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தக் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பலியானவர்கள் பெரும்பாலோனார், குழந்தைகள் மற்றும் பெண்கள் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சிலரது, நிலைமை மோசமாக உள்ளதாகப் பலியானோர் எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுக்கிறது. அதேபோல, பக்லான் என்ற பகுதியிலுள்ள வாக்காளர் மையத்தில் நேற்று குண்டு வெடிப்பு நடைபெற்றதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!