அடுத்தடுத்து நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பு - தொழுகைக்குச் சென்ற 24 பேர் பலி!

நைஜீரியாவில் உள்ள மசூதியில் நடந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் சுமார் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் உள்ள முபி நகரில் இருக்கும் ஒரு மசூதி ஒன்றில் தற்கொலைப் படையினர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த மசூதியில் பிற்பகல் அனைவரும் தொழுகைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மசூதிக்கு உள்ளே இருந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தனது உடம்பில் இருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார். குண்டுவெடிப்பை அடுத்துப் பயந்து அனைவரும் வெளியில் ஓடிவந்துள்ளனர் அப்போது வெளியில் மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் போகாஹராம் என்ற இஸ்லாமிய அமைப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. வடக்கு நைஜீரியாவில் முஸ்லிம்களின் ஆட்சியைக் கொண்டுவர கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பினர் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக அப்பகுதி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் தாக்குதலால் இதுவரை சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!