மேயர் ஆகிறார் ரெஸ்லிங் வீரர் கெய்ன்..!

அமெரிக்க மேயர் தேர்தலில், பிரபல ரெஸ்லிங் வீரர் கெய்ன் வெற்றிபெற்றுள்ளார். 

ரெஸ்லிங் ( WWE) போட்டிகளின்மூலம் பிரபலமானவர் கெய்ன். இவரது இயற்பெயர், க்ளென் தாமஸ் ஜேக்கப்ஸ். முகமூடி, கொடூர பார்வை, அண்ணன் அண்டர்டேக்கர் போன்று மரண அடி என ரெஸ்லிங்கில் பிரபலமானார் கெய்ன். களத்தில் ஆக்ரோஷத்துக்குப் பஞ்சம் வைக்காமல் எதிரிகளைத் துவம்சம்செய்து ரசிகர்களைக் குதூகலப்படுத்துவார். நீண்ட காலமாக ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்ற இவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ரெஸ்லிங்   கெய்ன், திரைப்படங்களைத் தாண்டி தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார். ஆம், மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் நாக்ஸ் கவுண்டி நகர மேயர் தேர்தலில் கெய்ன் போட்டியிட்டார். 

இந்தத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைவிட 17 வாக்குகள் அதிகம் பெற்று மேயராகியுள்ளார். ரெஸ்லிங் மூலம் பிரபலமானதால், பிரச்சாரத்தின் போது அவருக்கு, மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே, வெற்றிகுறித்துக் கூறியுள்ள அவர்,  ``எனக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வரலாற்று வெற்றியை வெல்ல உதவிய அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி எனது குழுவினால்தான் சாத்தியமானது. பொதுத் தேர்தலிலும் வெற்றியை எதிர்நோக்குகிறோம்" எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!