வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை: ஐ. நா. கண்டனம்! | North Korea conducts third nuclear test

வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (12/02/2013)

கடைசி தொடர்பு:18:09 (12/02/2013)

வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை: ஐ. நா. கண்டனம்!

சியோல்: வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியுள்ள  நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா  உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக உலக நாடுகளால் குற்றம் சாட்டப்படும்  வடகொரியா, இன்று 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை உறுதி  செய்துள்ளது.

ஆனால், 2006, 2009 ஆண்டுகளில் பயன்படுத்தியதைவிட குறைவான சக்தியைக்  கொண்டே இந்த சோதனை செய்யப்பட்டுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.

வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியுள்ள நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மிகப் பாதுகாப்பாகவும், மிகச்சரியான முறையில் இந்த

சோதனை நடத்தப்பட்டது. இந்த  சோதனையால் இயற்கைச் சூழலில் எந்தவித மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை  என்று வடகொரியா அரசு தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்த அணுகுண்டு சோதனைக்கு ஐக்கிய நாடுகளின் தலைவர்  பான்-கி-மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வடகொரியா இன்று நடத்திய அணுகுண்டு சோதனை ஐ.நா. பாதுகாப்பு சபையின்  தீர்மானங்களுக்கு முற்றிலும் எதிரானது என பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர்  மார்டின் நேசிர்கி தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்