46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிடும் அமெரிக்கர்..!

அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்டு கோர்ஸ்கி என்பவர், இதுவரை 30,000 பர்கர் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். 

அமெரிக்காவைச் சேர்ந்தவர், டொனால்டு கோர்ஸ்கி. இவர், சிறைக் காவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்,  28,788 பிக் மேக் எனப்படும் பர்கர் சாப்பிட்டதற்காக, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். இரண்டு நாள்களுக்கு முன், 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளார். இதுகுறித்து அவர், 'ஒரு நாளைக்கு இரண்டு தடவை என 46 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பர்கர் சாப்பிட்டுவருகிறேன். பர்கரை மிகவும் விரும்புகிறேன்.

அதில் இருக்கும் சாஸ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான், 86 கிலோ எடையில்தான் இருக்கிறேன். குதிரையைப் போல ஆரோக்கியமாக உள்ளேன். இதனால், நான் ஏதும் பாதிக்கப்படவில்லை' என்று தெரிவித்தார். கடந்த 46 ஆண்டுகளில், எட்டு நாள்கள் மட்டுமே பர்கர் சாப்பிடாமல் இருந்ததாகக் கூறியுள்ளார். 1972-ம் ஆண்டிலிருந்து அவர், பர்கர் வாங்கியதற்கான ரசீதுகளைப் பத்திரப்படுத்திவைத்துள்ளாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!