ஆர்ப்பரிக்கும் எரிமலை - மிரட்டும் வீடியோ காட்சிகள் #shocking #Viral

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை ஒன்று இரு தினங்களுக்கு முன்பு வெடித்துச் சிதறியது. இதன் லாவா குழம்புகள் தற்போது குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. 

எரிமலை

Photo credit : paradise Helicopter

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலியோவா என்ற எரிமலை கடந்த சில தினங்களாகவே கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இது வெடித்தால் எந்தத் திசையை நோக்கி நெருப்புக் குழம்புகள் வரும் எனத் தெரியாமல் எரிமலை கண்காணிப்புக் குழுவினர் சிரமப்பட்டு வந்தனர். அதனால் லெய்லானி பகுதியில் வாழும் சுமார் 700 பேர் குடும்பங்களுடன் வெளியேற்றப்பட்டனர். சீற்றம் தொடங்கியதிலிருந்தே நெருப்புக் குழம்புகள் மெதுவாக வெளிவரத்தொடங்கிவிட்டன.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எரிமலை வெடித்துச் சிதறியது. அதிலிருந்து ஆக்ரோஷமான தீப் பிழம்புகளைத் தொடர்ந்து உமிழ்ந்து வருகிறது. லெய்லானி பகுதியே கரும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஹவாய் தீவில் 6.7 ரிக்டர் அளவுகோளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதுவரை ஹவாய் தீவில் ஏற்பட்ட மிகப் பெரிய நில நடுக்கம் இது எனக் கூறப்படுகிறது. அவ்வப்போது சிறியதாகப் பல நில நடுக்கங்களும் உருவாகின்றன. சாலைகளில் ஏற்பட்டுள்ள பிளவில் இருந்து வெளியாகும் புகையால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

லெய்லானி பகுதியிலேயே நீண்ட நாள்களாக வாழ்ந்து, பல எரிமலை வெடிப்புகளைப் பார்த்தவர்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. எரிமலையிலிருந்து வெளியேறும் நெருப்புக் குழம்புகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கி சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. 

 

இதுதொடர்பான மேலும் புகைப்படங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!