ட்ரம்ப் - கிம் ஜாங் சந்திப்பு நடக்கப்போகும் நாடு..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு, சிங்கப்பூரில் நடைபெறும் எனத் தெரிகிறது.

அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவந்ததால், அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கு இடையே மோதல் நீடித்துவந்தது. ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் மாறி மாறி எச்சரிக்கை விடும் அளவுக்கு இந்த மோதல் நீடித்தது. இந்த நிலையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட்டது. இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் சந்தித்துக்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் முன்னோட்டமாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட கொரியா மற்றும் தென் கொரிய அதிபர்களுக்கிடையேயான சந்திப்பு நடைபெற்றது. மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேரை சிறைக் கைதிகளாக வைத்திருந்த வட கொரியா, தற்போது அவர்களை விடுவித்துள்ளது. கிம் மற்றும் ட்ரம்ப் சந்தித்துக்கொள்ளும் இடம்  உறுதி செய்யப்படாமலிருந்தது. தற்போது, இருவருக்குமான சந்திப்பு சிங்கபூரில் நடைபெறும் எனத் தெரிகிறது. இருப்பினும், நேரம் உறுதிசெய்யப்படவில்லை. இந்த சந்திப்புகுறித்து தெரிவித்த கிம், 'இந்த சந்திப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருக்கும். கொரிய தீபகற்பப் பகுதியில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கும், சிறந்த எதிர் காலத்தை அமைப்பதற்கும் இந்தச் சந்திப்பு முதல் அடியாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!