வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (11/05/2018)

கடைசி தொடர்பு:09:11 (11/05/2018)

நியூயார்க்கில் மிளிர்ந்த பிரியங்கா சோப்ரா... சர்ச்சைக்குள்ளான ரெட் கார்பெட்! #MetGala2018

'ஃபேஷன்' விரும்பிகளுக்கான மிகப்பெரிய நிகழ்வு, 'Met Gala 2018' நியூயார்க் நகரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. வித்தியாசமான தலைப்புக்கு ஏற்றதுபோல், ஹாலிவுட் பிரபலங்கள் தங்களின் ஆடைகளை வடிவமைத்து, நிகழ்வின்போது உடுத்துவது வழக்கம். இது முழுக்கமுழுக்க ஆடை வடிவமைப்பின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஓர் வித்தியாச ஃபேஷன் நிகழ்வு. இதில் இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா வித்தியாச உடை அணிந்து மிளிர்ந்தார்.

பிரியங்கா சோப்ரா

அந்த வகையில் இந்த ஆண்டின் தலைப்பு, ''Heavenly Bodies: Fashion and the Catholic Imagination'. தலைப்பே சர்ச்சையைக் கிளப்பியது. மதம் சார்ந்த தலைப்பு என்பதால் பல தரப்பினரும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். கிறிஸ்துவர்களின் ஒரு பிரிவான 'கத்தோலிக்க' சமூகத்தைச் சார்ந்திருப்பதால், சச்சரவுகள் இருக்கத்தானே செய்யும். இருப்பினும், ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் விதவிதமான அழகிய ஆடைகளை வடிவமைத்து அரங்கையே வண்ணத்தால் நிறைத்தனர்.

பல ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு 'போப்' மற்றும் கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் வாடிகன் நகரிலிருந்து இந்த நிகழ்வுக்கான அனுமதி பெறப்பட்டது. 'மதம் சம்பந்தப்பட்ட தலைப்பு... கொஞ்சம் தவறு நேர்ந்தாலும் பெரிய பிரச்னை ஆகிவிடுமே!' என்கிற பயம் அனைத்து வடிவமைப்பாளர்கள் மனதிலும் இருந்தது. பொதுவாகவே Dolce & Gabbana, Versace போன்ற முன்னணி பிராண்டுகள், தங்களின் ஆடைகளில் மதம் சார்ந்த டிசைன்களைப் பயன்படுத்திய வரலாறுகள் உண்டு. அந்த வகையில் இந்த Met Gala நிகழ்வு அவர்களுக்குப் பெரிய சவாலாகவே அமைந்தது.

பல்வேறு தடைகளைக் கடந்து, எண்ணற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் கற்பனைத்திறனால் உருவாக்கிய பல ஆடைகள் நியூயார்க் நகரையே திரும்பிப் பார்க்க வைத்தன. அதில் சில முக்கிய ஆடைகளின் அணிவகுப்பு இதோ.

Rihanna


வித்தியாசமான ஆடைகள், ஒப்பனை என்று தனக்கென்று தனிப்பட்ட ஸ்டைலை பின்பற்றும் பிரபலப் பாடகி ரிஹானா, முத்துக்கள் மற்றும் கிரிஸ்டல் கற்கள் பதித்த நீண்ட ஆடை, அதற்கேற்ற கிரீடம் என மேசன் மார்ஜீலாவின் உடையில் 'போப்' தோற்றத்தைக் கண்முன் நிறுத்தினார்.

ஜேர்ட் லீடோ மற்றும் லானா டெல் ரே


பிரபல இசைக்கலைஞர்களான ஜேர்ட் லீடோ மற்றும் லானா டெல் ரே முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருந்தனர். லீடோ, இயேசு அவதாரத்தில், தங்க கிரீடம் அணிந்தும், லானா டெல், க்ரீம் நிற கவுன், பறவைபோன்ற கிரீடம், 3 -D வடிவிலான வாள்கள் தோய்த்த இதயம் என மாறுபட்டத் தோற்றத்தில் அனைவரையும் கவர்ந்தனர்.

Lily Colins


'Mirror Mirror', 'The English Teacher' போன்ற வெற்றிப்படங்களில் நடித்த லில்லி கொலின்ஸ், கறுப்பு நிற ஆடை அணிந்து, செயற்கையான சிவப்பு நிற கண்ணீர் ஒப்பனை செய்திருந்தார்.

Cardi B


பிரபல அமெரிக்க ராப்பரான கார்டி பி, வயிற்றில் தன் குழந்தையை சுமந்தபடி விழாவைச் சிறப்பித்தார். கிரீடம் மற்றும் ஆடை முழுதுவதும் முத்துக்கள் பதித்து, அன்னை மேரி தோற்றத்தில் ஜொலித்தார்.

கிரெட்டி கேர்விக்


நடிகை, எழுத்தாளர், இயக்குநர் என்று ஹாலிவுட்டின் most wanted பிரபலம் கிரெட்டி கேர்விக், அதிக வேலைப்பாடுகள் ஏதுமில்லாத கன்னியாஸ்திரி உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சாட்விக் போஸ்மன்


சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த 'Black Panther' படத்தின் நாயகன் சாட்விக் போஸ்மன், வெள்ளை நிற பேன்ட், சட்டை, ப்ளேசர் மற்றும் 'Cape'களில் தங்கத்திலான சிலுவை மற்றும் பூக்கள் மோட்டீஃப் பதித்து, பேந்தரிலிருந்து பாதிரியாரானார்.

Priyanka Chopra


பாலிவுட் பியூட்டி பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டிலும் தனக்கென்று தனி இடத்தைத் தக்கவைத்துள்ளார். ஹாலிவுட்டில் முதன்மை கதாபாத்திரத்துக்கு தேர்வாகி, Quantico தொடர், Baywatch திரைப்படம் என பிளாக் பஸ்டர்களை அடுக்கிய முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராதான். இந்த Met Galaவில், தலைப்பிற்கேற்ற வெல்வெட் கவுனுடன், தங்க 'Hood' அணிந்து அழகு தேவதையாய் ஜொலித்தார் பிரியங்கா. இவரின் இந்த வித்தியாச தோற்றத்துக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 'நூறு சதவிகிதம் தலைப்புக்கு ஏற்ற உடை' எனவும் பலர் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

ஜேடன் ஸ்மித், செலீனா கோமெஸ், ஜெனிபர் லோபெஸ், அரியானா கிராண்ட், கிம் கார்தர்ஷியன், மேலும் பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.


டிரெண்டிங் @ விகடன்