இனி குறித்த நேரத்தில் `பர்கர்கள்’ பறந்து வரும் - உபெர் நிறுவனத்தின் புதிய முயற்சி

பறக்கும் ட்ரோன்கள் மூலம் உணவு டெலிவரி செய்யும் புதிய முயற்சியில் உபெர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

உபேர்

இப்போதுள்ள உணவு டெலிவரி செய்யும் அப்-களில் ஆர்டர் செய்தால் ட்ராஃபிகில் சிக்கி 30 நிமிடத்தில் வர வேண்டிய உணவுகளைச் சுவை மாறியதும் 1 மணி நேரத்திலோ அல்லது அதன் பிறகோதான் டெலிவரி செய்கின்றனர். சில டெலிவரி பாய்கள் பதிவு செய்த முகவரிக்குச் செல்ல வழி தெரியாமல் அலையும் கதைகளும் உண்டு. 

இந்த முறையை மாற்றியமைப்பதுக்கு டோமினோஸை அடுத்து புதிய முயற்சியுடன் முதல்முதலாகக் களத்தில் இறங்கியுள்ளது உபெர் போக்குவரத்து நிறுவனம். அதன் படி நாம் இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகளை ட்ரோன்கள் உதவியுடன் டெலிவரி செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இது குறித்துப் பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தாரா கோஸ்ரோஷாகி, ``உபெர் ஆப் மூலம் தேவைப்படும் உணவுகளைச் குறிப்பிட்ட நேரத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பட்டனை அழுத்தினால் போதும் உணவு வீட்டின் கதவைத் தட்டும்.  5 நிமிடம் முதல் அதிகபட்சமாக 30 நிமிடத்துக்குள் உணவு உங்கள் வீடு தேடி வந்துவிடும். இதன் முதல் கட்ட சோதனை முயற்சியாக அமெரிக்காவில் 10 மாகாணங்களில் உள்ள பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசுப் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் ” எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!