`வடகொரியா அணு ஆயுத சோதனையைக் கைவிட இதுதான் காரணம்!’ - பொங்கும் ஆய்வாளர்கள் | Analysts have discovered that the Mountain is 11.5 feet long by the North Korean nuclear test.

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (12/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (12/05/2018)

`வடகொரியா அணு ஆயுத சோதனையைக் கைவிட இதுதான் காரணம்!’ - பொங்கும் ஆய்வாளர்கள்

வடகொரிய நடத்திய அணு ஆயுதச் சோதனையால் அங்குள்ள மேன் டாப் மலை 11.5 அடி நகர்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

வடகொரியா

கிம் ஜாங் உன் வடகொரியாவின் அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டின் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல அணு ஆயுதச் சோதனையை நடத்தினார். இதனால் அருகில் உள்ள நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வடகொரியாவில் நடைபெற்ற அணு ஆயுதச் சோதனையின் விளைவாகத் தென் கொரியாவில் 6.1 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகொரியாவால் கடும் அதிருப்தியடைந்த மற்ற நாடுகள் சோதனையை நிறுத்தும் படி கூறின. ஆன அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தனது சோதனையைத் தொடர்ந்து  நடத்திக்கொண்டிருந்தது. இதனால் ஐ.நா நாடுகள் வடகொரிய மீது பொருளாதாரத் தடை விதித்திருந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அணு ஆயுதச் சோதனை இனி தொடரப் போவதில்லை என்றும் சோதனை மையங்கள் முற்றிலும் மூடப்படும் எனவும் வடகொரியா அறிவித்தது. 

வடகொரியா அணு ஆயுதச் சோதனை நடத்திய இடத்தில் சில மாதங்களாகத் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் சோதனை நடத்தப்பட்ட மேன் டாப்  மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதாகவும், 1.6 அடி பூமிக்கு அடியில் புதைந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வடகொரியா நடத்திய அணு ஆயுதச் சோதனை, ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணு குண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது எனத் தெரிவித்துள்ளனர். மேன் டாப் மலைப்  பகுதியில் உள்ள சோதனைக் கூடம் முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாகவே அதிபர் கிம் ஜாங் உன் தான் சோதனையைக் கைவிடுவதாக அறிவித்தார் என்றும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சோதனைக் கூடத்தை உலக நாடுகளுக்கு அறிவித்து மூடு விழா நடத்துவதாகவும் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.