கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து - 100க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

கியூபா நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 

கியூபா விமானம் விபத்து

கியூபா நாட்டின் ஹவானா விமான நிலையத்திலிருந்து, ஹோல்குயின் நகருக்கு போயிங் 737 ரக பயணிகள் விமானம் ஒன்று 104 பயணிகளுடன் நேற்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமான நிலையம் அருகிலேயே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுப் பணிகள் நடைபெற்றுவந்தன. இதற்கிடையே, விமானத்தில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. மேலும் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தை அறிந்த கியூபா அதிபர் மிகேல் தியாஸ் கேனல் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  `` துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார். இதற்கிடையே, விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானம் 1979-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது என்றும், கடந்த 39 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்தது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!