வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (19/05/2018)

கடைசி தொடர்பு:13:20 (20/05/2018)

காதலி மேகன் மார்கிலை கரம்பிடித்தார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி! #RoyalWedding

உலகமே எதிர்பார்த்திருந்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி - அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், இன்று கோலாகலமாக லண்டனிலுள்ள வின்ட்சார் கோட்டையில் நடைபெற்றது.

லகமே எதிர்பார்த்திருந்த, இங்கிலாந்து இளவரசர் ஹாரி - அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், இன்று கோலாகலமாக லண்டனிலுள்ள வின்ட்சார் கோட்டையில் நடைபெற்றது.

ஹாரி-மேகன் மார்கில் திருமணம்

 

இந்தப் பிரமாண்ட அரச குடும்ப திருமண நிகழ்ச்சியில், பிரபல அமெரிக்க தொகுப்பாளர் ஒப்ரா வின்ஃபரே, ஹாலிவுட் நடிகர்  ஜார்ஜ் க்ளூனி, பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம்  உள்ளிட்ட 600 விருந்தினர்கள் கலந்துகொண்டு, புதுமண ஜோடிகளை வாழ்த்தினர். மேலும்  2,000-த்துக்கும் மேற்பட்ட தேர்ந்தேடுக்கப்பட்ட நபர்கள், இந்தத் திருமணத்தை வின்ட்சார் கோட்டைக்கு கீழ்த்தளத்திலிருந்து பார்க்க அனுமதிக்கப்பட்டனர். 

திருமண நிகழ்ச்சியின்போது, மணப்பெண் ஆறு தோழிகளுடனும் இளவரசர் வில்லியம்ஸின் குழந்தைகள் பிரின்ஸ் ஜார்ஜ் மற்றும் பிரின்ஸ் சார்லோட்டே உட்பட நான்கு குழந்தைகள், ‘பேஜ்பாய்ஸ்’ ஆகப் பின் தொடர, மார்கிலேவைக் கோட்டைக்குள் அழைத்துச் சென்றனர். இங்கிலாந்து ராணி, மேகன் மார்கிலுக்கு பரிசளித்த விலையுயர்ந்த வில்ஷே தங்கம் கொண்ட மோதிரத்தை  அவர் அணிந்திருந்தார். இளவரசர் ஹாரி, பிளாட்டினம் மோதிரத்தை அணிந்தார்  . 

இந்தப்  பிரமாண்ட அரச குடும்பத் திருமண விழாவைக் காண, பிரிட்டனிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும்  அமெரிக்காவிலிருந்தும் ரசிகர்கள், முந்தைய நாள் இரவு சாலைகளில் காத்திருந்தனர். புதுமண ஜோடி, பொதுமக்களைக் காண, கோட்டையைச்  சுற்றியுள்ள பகுதிகளை வலம் வருவார்கள்!. இனி, இவர்களை சசெக்ஸ் மாகாணத்தின் ட்யூக் மற்றும் டச்சஸ் ( Duke and Duchess of Sussex) என்று அழைக்கப்படுவார்கள் . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க