வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (30/05/2018)

கடைசி தொடர்பு:08:42 (30/05/2018)

சிறுவனைக் காப்பாற்றிய இளைஞரை நெகிழவைத்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!

பாரிஸில், அந்தரத்தில் தொங்கிய சிறுவனைக் காப்பாற்றிய இளைஞருக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அந்நாட்டுக் குடியுரிமை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார்.

மேக்ரான்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பாரிஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்  நான்காவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன், பால்கனியில் இருந்து தவறிக் கீழே விழும் அளவிற்குத் தொங்கிக்கொண்டிருந்தான். சிறுவன் அழும் சத்தம் கேட்டு, சிறுவனின் பெற்றோர் வெளியே வந்துள்ளனர்.

அப்போது, அந்த வழியாக வந்த மாலி நாட்டு இளைஞர் கஸாமா என்பவர்,  தன் உயிரைப் பற்றி யோசிக்காமல், பாதுகாப்புக் கவசம்  எதையும் அணிந்துகொள்ளாமலே, ஸ்பைடர்மேன்போல கட்டடத்தின் ஸ்லாப்களை மட்டும் பிடித்து சரசரவென  மேலே ஏறி, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறுவனை ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் காப்பாற்றிவிட்டார். கஸாமா, சிறுவனைக் காப்பாற்றும் வீடியோ, இணையதளங்களில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. 

இந்தச் சம்பவத்துக்குப் பின்னர்,  `ஸ்பைடர்மேன்' என்று வலைதளங்களில் பெருமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில், சிறுவனைக் காப்பாற்றிய கஸாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், அவருக்கு அந்நாட்டுக் குடியுரிமையை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். மேலும், கஸாமாவின்  திறமையைப் போற்றும் விதமாக, அவருக்கு பிரான்ஸ் நாட்டு தீயணைப்புத் துறையில் வேலையும் வழங்கினார் மேக்ரான் . கஸாமா, மாலி நாட்டைச் சேர்ந்தவர். அவர், அங்கு அகதியாகக்  குடியிருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க