`6 மாதம்தான் உங்களுக்கு டைம்' - அமைச்சர்களைக் கதிகலங்க வைத்த பிரதமர்

6 மாதத்தில் லேப்டாப் இயக்கக் கற்றுக்கொள்ளவில்லையென்றால் பதவி பறிக்கப்படும் என நேபாள அமைச்சர்களுக்கு அந்நாட்டுப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேபாள பிரதமர்

photo credit : Al Jazeera

நேபாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பார்லிமென்ட் மற்றும் மேல்சபைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதில், கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னாள் பிரதமர் பிரசண்டா தலைமையிலான மாவோயிஸ்ட் சென்டர் கட்சியும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. இதையடுத்து சர்மா ஒலி, மீண்டும் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் முறை பிரதமராகப் பதவியேற்றது முதல் இந்தியாவுடன் நெருக்கம் காட்டிவருகிறார். அதேவேளையில் தனது அமைச்சரவையை முற்றிலும் கணினி மயமாக்க முடிவுசெய்துள்ள அவர், தற்போது அந்நாட்டு அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஓர் அறிவிப்பைச் சர்மா ஒலி வெளியிட்டுள்ளார். 

12 வது தேசிய ஆசிரியர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், ``நான் ஏற்கெனவே அமைச்சரவை கவுன்சில் கூட்டத்தில் பேசியபடி
6 மாதங்களில் அலுவலகப் பணிகள் அனைத்தும் கணினி மூலமாகவே மேற்கொள்ளப்படும். மீட்டிங் உள்ளிட்ட அனைத்தும் இனி லேப்டாப் மூலமாக நடைபெறும். எனவே, அனைத்து அமைச்சர்களும் லேப்டாப் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். 6 மாதங்களில் தனியாக லேப்டாப் இயக்கக் கற்றுக்கொள்ளாத அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அவர்களுக்குப் பிரியாவிடை கொடுக்கப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!