திட்டமிட்டபடி ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு - அமெரிக்க உறுதி | White house confirms the meeting between Trump and Kim Jong un on June 12th in Singapore!

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (06/06/2018)

கடைசி தொடர்பு:07:13 (06/06/2018)

திட்டமிட்டபடி ட்ரம்ப்- கிம் ஜாங் சந்திப்பு - அமெரிக்க உறுதி

ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு, சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை உறுதிபடத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான அணு ஆயுத மோதல் போக்கு முடிவுக்கு வந்து, இருநாடுகளும் சமரசமாகச் செல்வது என முடிவெடுத்துள்ளன. சீனா, தென் கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, வடகொரியா - அமெரிக்கா இடையே சமரசம் ஏற்பட்டது. இந்நிலையில் ஜூன் 12-ம் தேதியன்று, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து கிம் ஜாங்-கின் உதவியாளர் கிம் யாங் சோல், வாஷிங்டனில் அமெரிக்க அதிபரை சில தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். வடகொரிய அதிபரின் சார்பில் கடிதம் ஒன்றையும் ட்ரம்பிடம் கிம் யாங் அளித்தார். 

இதற்கிடையே ட்ரம்ப் - வடகொரிய அதிபர் சந்திப்பு நடைபெறுமா என்ற சந்தேகம் நீடித்தது. ஆனால், தற்போது அந்த சந்திப்பை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவுச் செயலாளர் சாரா சாண்டரஸ் கூறுகையில், "வடகொரிய அதிபருடனான சந்திப்பு குறித்த தகவல்களை அதிபர் ட்ரம்ப் தினமும் தேசிய பாதுகாப்புக் குழுவினரிடம் இருந்து பெற்று வருகிறார். சிங்கப்பூரில் திட்டமிட்டபடி, வரும் 12-ம் தேதி இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close