சிங்கப்பூரில் டொனால்டு ட்ரம்ப் வருகைக்காக கிம் ஜாங் காத்திருந்தது ஏன்?  | wha was Kim Jong-un wating for donold trump arrival ?

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (12/06/2018)

கடைசி தொடர்பு:14:08 (12/06/2018)

சிங்கப்பூரில் டொனால்டு ட்ரம்ப் வருகைக்காக கிம் ஜாங் காத்திருந்தது ஏன்? 

கிம் ஜாங் அன் உடன் அமெரிக்க அதிபர் சந்திப்பு

சிங்கப்பூரில் டொனால்டு ட்ரம்ப் வருகைக்காக கிம் ஜாங் காத்திருந்தது ஏன்? 

சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு  ட்ரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நிகழ்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்தச் சந்திப்பு நடந்த ஹோட்டலுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் முதலில் வந்து ட்ரம்ப் வருகைக்காகக் காத்திருந்தார். வடகொரிய பாரம்பர்யப்படி வயதில் இளையவர்கள்தான் பெரியவர்கள் வருகைக்காகக் காத்திருக்க வேண்டும். அதனால் கிம் ஜாங் அன் முன்னரே வந்து விட்டார். கிம் வந்தபின், ஒரு நிமிடம் தாமதமாக அமெரிக்க அதிபர் வந்தார். 

கிம் ஜாங் அன் ட்ரம்ப் சந்திப்பு

`உங்களைச் சந்தித்ததில் உள்ளபடியே அகமகிழ்கிறேன் பிரெசிடென்ட்...'  என் டேபிளில் அணு ஆயுத பொத்தான் எப்போதும் தயாராக இருக்கிறது என்று ட்ரம்ப்பிடம் வார்த்தைப்போர் புரிந்துகொண்டிருந்த கிம் ஜாங் அமெரிக்க அதிபரிடம் நேரில் பேசிய முதல் வார்த்தை. `எனக்கு கிடைத்த கௌரவம் இது. வருங்காலத்தில் நம் உறவு உன்னத நிலையை எட்டும்' என்று ட்ரம்ப் அதற்கு பதில் அளித்தார். பின்னர், அருகில் இருந்து லைப்ரரிக்குள் சென்று இருவரும் சில நிமிடங்கள் தனியே பேசிக்கொண்டிருந்தனர். 

`இந்தச் சந்திப்பை உலக மக்கள் வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ அறிவியல் புனைகதை படம்போல மக்கள் கருதுகிறார்கள்' என்று டொனால்டு  ட்ரம்பிடம் கிம் ஜாங் அன் மீண்டும் அளவளாவ, உலக அமைதிக்கு இது நல்லது. சமாதானத்துக்காக முன்னுரை எழுதப்பட்டுள்ளது. மிகப் பெரிய பிரச்னையை, குழப்பத்தை தீர்த்துள்ளேன்' என்று அமெரிக்க அதிபரிடமிருந்து பதில் வந்தது.

எதிர்பார்த்ததைவிட இந்தச் சந்திப்பு சிறப்பானதாக இருந்ததாக டொனால்டு  ட்ரம்ப் குறிப்பிட்டார். சிங்கப்பூரைவிட்டு இன்று மதியம் கிம் ஜான் அன்னும் இரவில் ட்ரம்பும் தாய்நாடு புறப்படுகின்றனர். அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் போம்பியோ, பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஜான் பார்ல்ட்டன், வெள்ளை மாளிகைத் தலைவர் ஜான் கெல்லி, அமெரிக்க அதிபரின் செய்தித்துறை செயலர் சாரா சாண்டர் வடகொரிய ராணுவ புலனாய்வுத்துறை முன்னாள் தலைவர் கிம் யங் சால், வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யாங் ஹோ,வடகொரிய தொழிலாளர் கட்சித் துணைத் தலைவர் ரி சு யங் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க