”கேங்ஸ்டர்னு தேடினா என் படம் ஏன் வருது... 2 லட்சம் டாலர் கொடு!” - கூகுளை மிரட்டிய ஆஸ்திரேலியர்

கூகுள்

கூகுளுக்கு இது போதாத காலம். ஃபேஸ்புக் அளவுக்கு இல்லையென்றாலும், கூகுளையும் ஆளாளுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி துவம்சம் செய்கிறார்கள். இந்த முறை சாட்டையை எடுத்திருப்பது ஓர் ஆஸ்திரேலியர். 

Milorad Trkulja என்ற அந்த நபரை 2004-ம் ஆண்டு அடையாளம் தெரியாத கேங்ஸ்டர் ஒருவர் சுட்டுவிட்டார். இப்போது, கூகுளின் ஆஸ்திரேலிய அடியாள் கூட்டத்தைப் பற்றி தேடினால், இவர் புகைப்படத்தையும் பெயரையும் சேர்த்துக் காட்டுகிறது கூகுள். “நான் அடிவாங்கினவன்டா... அடிச்சவன் இல்லை” எனக் கூகுளுக்கு பலமுறை மெயில் அனுப்பிப் புலம்பியிருக்கிறார் மிலோரட். கூகுள் பதில் சொல்லவேயில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மிலோரட், 2012-ம் ஆண்டு கூகுள் மீது வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த விக்டோரியா நீதிமன்றம், “இதுல உங்கள் புகழுக்கு பெரிதாய் களங்கம் ஏதுமில்லை. இதுக்கெல்லாம் 2 லட்சம் டாலர் கிடையாது” எனச் சொல்லிவிட்டது. பேரும் கெட்டு, பணமும் மிஸ் ஆகி, மிலோரட் ரொம்பவே கஷ்டப்பட்ட காலம் அது.

சென்ற ஆண்டு, இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய  உயர் நீதிமன்றம் அனுமதி தந்தது. எப்படியாவது இந்த வழக்கை முடிக்க நினைத்த கூகுள் வழக்கறிஞர், “சர்ச் ரிசல்ட்ல வர்ர எல்லோருமே குற்றவாளிகள் என நினைப்பது தவறு. இது வேண்டுமென்றே அவரை இழிவுப்படுத்துவது அல்ல” என்றார். “அதெல்லாம் சரிதான், இருந்தாலும் அவர் வழக்குத் தொடுக்கலாம்” எனச் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.

”இப்படியெல்லாம் பண்ணா நான் எப்படி தொழில்செய்வது?” எனக் குழப்பத்தில் இருக்கிறது கூகுள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!