வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (18/06/2018)

கடைசி தொடர்பு:09:24 (18/06/2018)

கலை நிகழ்ச்சியில் கூடிய மக்களுக்கு நேர்ந்த சோகம்

நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் மர்ம நபர்கள் இரண்டு பேர் புகுந்து துப்பாகிச்சூடு நடத்தியுள்ளனர்.

கலை நிகழ்ச்சி


அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நேற்று கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் புகுந்த இரு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென தங்களின் கைகளில் வைத்திருந்த துப்பாக்கிகள் மூலம் மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினர்.

நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு வழங்கிய போலீஸார் உடனடியாக சுதாரித்துக்கொண்டு மர்ம நபரை நோக்கி எதிர் தாக்குதல் நடத்தினர். அதில் துப்பாக்கிச்சுடு நடத்திய ஒருவர் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மேலும் சில துப்பாக்கிகளைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.