அணு ஆயுத பலத்தில் இந்தியாவை மிஞ்சிய பாகிஸ்தான்..!

ஸ்டாக்ஹோம் என்ற அமைதி குறித்த ஆராய்ச்சி நிறுவனம் உலகில் அணு ஆயுதங்கள் அதிகம் கொண்ட நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவைவிட

ஸ்டாக்ஹோம் என்ற அமைதி குறித்த ஆராய்ச்சி நிறுவனம் உலகில் அணு ஆயுதங்கள் அதிகம் கொண்ட நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவைவிட பாகிஸ்தான் முன்னணியில் இருக்கிறது. பாகிஸ்தானிடம் 140 அணு ஆயுதங்கள் தற்போது இருப்பதாகக் கூறும் அந்த ஆய்வறிக்கையில் இந்தியா 130 அணு ஆயுதங்களோடு வரிசையில் அதற்கு அடுத்ததாக உள்ளது. சென்ற ஆண்டைவிட பாகிஸ்தான் 10 அணு ஆயுதங்கள் அதிகமாகத் தற்போது வைத்திருக்கிறது.

பாகிஸ்தான்

SIPRI Report

இந்தியா மற்றும் பாகிஸ்தான் தங்களது அணு ஆயுதங்களின் இருப்பைத் தொடர்ச்சியாக அதிகரிப்பதிலேயே முனைந்திருக்கின்றன. அதே சமயம் புது ரக நிலம், கடல் மற்றும் விண் சார்ந்த ஏவுகணைகளையும் அதிகரிப்பதிலும் முனைந்துள்ளன." என்கிறது அந்த அறிக்கை.
சீனா தனது ஏவுகணைகளைப் பல்வேறு தொழில்நுட்பங்களோடு புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. அத்தோடு அதன் ஏவுகணைச் சாலைகளையும் விரிவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

உலகின் மொத்த அணு ஆயுதங்களில் 92 சதவிகிதம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஃபிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய ஒன்பது நாடுகளிடம் மட்டும் தற்போது 14,465 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!