அமெரிக்காவில் குவிந்துகிடக்கும் உலகின் 46% துப்பாக்கிகள்..!

உலகளவில் குடிமக்களிடம் சொந்தமாகத் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் ஆசையைத் தூண்டுவது அமெரிக்காவின் குடிமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாமென்ற சட்டம் தான். சாதாரணமாக வருடத்திற்கு அமெரிக்க மக்கள்

ஜெனீவாவைச் சேர்ந்த Graduate Institute of International and Development Studies என்ற ஒரு சர்வதேச அமைப்பு துப்பாக்கிகள் குறித்த ஓர் ஆய்வை நடத்தினர். உலகின் 133 நாடுகளில் கிடைத்த தரவுகளையும், 56 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளையும் சேகரித்தனர். அதன்படி குடிமக்களால் உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகள் உலகளவில் 85.7 கோடி இருப்பதாகவும், அதில் 32.6 கோடி துப்பாக்கிகள் அமெரிக்கக் குடிமக்களிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிகள்

உலகளவில் குடிமக்களிடம் சொந்தமாகத் துப்பாக்கி வைத்துக்கொள்ளும் ஆசையைத் தூண்டுவது அமெரிக்காவின் குடிமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாமென்ற சட்டம் தான். சாதாரணமாக வருடத்திற்கு அமெரிக்க மக்கள் 1.4 கோடி புதிய துப்பாக்கிகளையும், இறக்குமதி செய்யப்பட்ட துப்பாக்கிகளையும் வாங்குகிறார்கள்.

அதன்படி, 100 அமெரிக்கர்களுக்குத் தற்போது 120 துப்பாக்கிகள் வீதம் அமெரிக்காவில் புழங்கிக் கொண்டிருக்கிறது. உலகளவில் அதற்கடுத்ததாக 100 மக்களுக்கு 53 துப்பாக்கிகள் வீதம் யேமன் இரண்டாமிடத்திலும், 100 பேருக்கு 39 என்ற கணக்கில் மோன்டெனெகுரோ (Montenegro) மற்றும் செர்பியா மூன்றாமிடத்திலும் இருக்கின்றன. பாராட்டக்கூடிய வகையில் ஜப்பான் நாட்டின் குடிமக்களில் 100 பேருக்கு ஒன்று இருப்பதே அரிதாக உள்ளது. இந்த ஆய்வறிக்கையின் படி உலகின் துப்பாக்கிகளில் 46% அமெரிக்கர்கள் தான் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோனோர் பெரிய துப்பாக்கிகளைக்கூட சொந்தமாக வைத்திருக்கின்றனர். அதற்கு அந்த நாட்டுச் சட்டம் அனுமதியளிக்கிறது.

அமெரிக்கா

வயது வந்த நபரொருவர் மிகச் சாதாரணமாக அமெரிக்காவில் கடைகளுக்குள் சென்று அவருக்குத் தேவையான துப்பாக்கியை வாங்கிக்கொண்டு வரலாம். அதற்கு எந்த விதிமுறைகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. அமெரிக்கச் சந்தைகளில் துப்பாக்கிகள் விற்பனைக்கு அளவுக்கு அதிகமான தாராளம் காட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகளின் எண்ணிக்கை மட்டுமே.

இதைவிட அதிகளவிலான துப்பாக்கிகள் கள்ளச்சந்தைகளில் புழங்குவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கக் கலாச்சாரத்தின் மீதான மோகப் போர்வை உலகம் முழுவதையும் மூடிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அதன் ஆயுதக் கலாச்சாரமும் பரவும் அபாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதைத் தவிர்க்கவும் அமெரிக்காவின் பள்ளிகளில் அதிகளவில் நிகழும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைக் குறைக்கவும் துப்பாக்கிப் பயன்பாடுகளில் கடுமையானச் சட்டங்களை அமெரிக்கா இயற்றவேண்டியது அவசியமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!