`சே குவேரா டி-ஷர்ட் அணிந்ததால் அமெரிக்க ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

சே குவேரா படம் போட்ட டி-ஷர்ட்டை அணிந்ததற்காக, அமெரிக்க ராணுவத்திலிருந்து அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்பென்சர் ரபோன்

ஏகாதிபத்திய கொள்கைகளுக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராகப் போராடியவர் சே குவேரா. தனது கொள்கைகளாலும் சிந்தனைகளாலும் உலகெங்கும் உள்ள இளைஞர்களாலும் சோஷியலிசவாதிகளாலும் அதிகம் விரும்பப்படுபவர். இதனால், இவர் மறைந்தாலும் இவரது புகழ் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில், சோஷியலிசத்தை விரும்பிய அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர், சே குவேரா டி - ஷர்ட்டை அணிந்ததற்காகப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். ஸ்பென்ஸர் ரபோன் என்னும் 26 வயதான அந்த இளைஞர், நியூயார்க்கில் உள்ள வெஸ்ட் பாய்ன்ட் ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்றுவந்துள்ளார். இந்நிலையில்,கடந்த திங்கள் கிழமை பயிற்சிக்கு வந்தபோது, ராணுவ உடைக்குள் சே குவேரா படம் போட்ட டி - ஷர்ட்டை அணிந்து வந்துள்ளார். 

மேலும், இதேபோல கம்யூனிசத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான புகைப்படங்களையும் அவர் தொடர்ந்து பதிவிட்டுவந்துள்ளார். இதை அறிந்த ராணுவ அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியதோடு, அவரை ராணுவத்திலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டனர். டிஸ்மிஸ் குறித்து சற்றும் மனம் வருந்தாமல், துணிச்சலாக ராணுவக் குடியிருப்பின் முன் நின்று, 'ஃபைனல் சல்யூட்'  என்று உரக்க முழக்கமிட்டுள்ளார். முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு,  `கம்யூனிசம் வெல்லும்' எனத் தனது ராணுவத் தொப்பியில் எழுதி, அது வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, இவரின் கம்யூனிச பாசத்தால் அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடைபெற உள்ள 'சோஷியலிசம் 2018' மாநாட்டில் உரையாற்றும் வாய்ப்பு ரபோனுக்குக் கிடைத்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!