இரண்டு நாளில் பறிபோன 215 உயிர்கள் - லிபிய அகதிகளுக்கு நேர்ந்த சோகம் | 215 migrants drowned off Libya's Mediterranean over the last several days

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (22/06/2018)

கடைசி தொடர்பு:18:55 (22/06/2018)

இரண்டு நாளில் பறிபோன 215 உயிர்கள் - லிபிய அகதிகளுக்கு நேர்ந்த சோகம்

லிபிய அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில், இதுவரை 215 பேர் உயிரிழந்துள்ளதாக லிபிய அரசு அறிவித்துள்ளது.

அகதிகள்

photo Credits : twitter/@ajplus

உள்நாட்டுப் போர், கலவரம் ஆகியவற்றால் தங்களின் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த ஜூன்19-ம் தேதி, லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக சுமார் 100 அகதிகள் மரப் படகில் சென்றுகொண்டிருந்தனர். லிபியாவின் தலைநகர் திரிப்போலி என்ற இடத்தில் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாகப் படகு கவிழ்ந்ததில் 95 பேர் மாயமாகினர். இதைத் தொடர்ந்து, அதே நாளில் மத்திய தரைக்கடல் பகுதியின் வேரொரு திசையில் 130 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 70 பேர் மாயமாகினர். 

 மரப் படகில் சென்று உயிர்பிழைத்தவர்களில் 5 பேர் லிபிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, மற்றொரு படகு கவிழ்ந்த விபத்தில் மீட்கப்பட்ட 60 பேரும் மீண்டும் லிபியாவிற்கே அழைத்துச்செல்லப்பட்டனர்.

அகதிகள்

photo Credits : twitter/@ajplus

இந்த இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில், மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்றுவந்த நிலையில், ஜூன் 20-ம் தேதி திரிப்போலியில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ள கரபுலி என்ற கடற்பகுதியில் 50-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியிருந்ததை லிபிய மீட்புப் படையினர் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில், மத்திய தரைக்டல் பகுதிக்கு அருகில் உள்ள கடற்கரையில் மட்டும் சுமார் 165 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என தற்போது லிபிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கடந்த வருடம் மட்டும் 60,000 அகதிகள் லிபிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.