தடம் புரண்ட ரயில் - தண்ணீருடன் கலந்த 8 லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய்

அமெரிக்காவில் சரக்கு ரயில் தடம் புரண்டதில் சுமார் 8 லட்சம் லிட்டருக்கு அதிகமான கச்சா எண்ணெய் நதியில் கலந்துள்ளது.

கச்சா எண்ணெய்

கனடாவின் ஆல்பெர்டாவில் இருந்து அமெரிக்காவின் லோவா நகர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் நேற்று காலை, ஸ்வோலன் லிட்டில் ராக் நதியைக் கடக்கும் போது திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் சுமார் 32 சரக்கு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 8 லட்சத்து 71 ஆயிரம் லிட்டர் கட்சா எண்ணெய் நதியில் கொட்டியது. இதனால் நதி முழுவதும் கச்சா எண்ணெய் கலந்து காணப்படுகிறது. 

இது குறித்து பேசிய பி.என்.எஸ்.எஃப் ( Burlington Northern and Santa Fe Railway) செய்தி தொடர்பாளர் ஆண்டி வில்லியம்சன், அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக நேற்று அதிகாலை 4:30 மணியளவில் சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளது. இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. சுமார் 32 சரக்கு பெட்டிகள் கவிழ்ந்துள்ளது. மொத்த ரயிலில் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய்யில் பாதி நதியில் கலந்துள்ளது. விபத்து குறித்து தகவல் தெரிந்த உடனேயே சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.  எட்டு கிலோமீட்டர் தூரம் வரையிலும் எண்ணெய் பரவியுள்ளது. வாக்யூம் டிரக்குகள் மூலம் நதியில் இருந்து கச்சா எண்ணெய்யை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்தெடுக்கும் சிறப்பு இயந்திரமும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

Video Credits : facebook/Know Now

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!