மனச்சோர்வை அகற்றும் தண்ணீர்?! - கனடாவில் அறிமுகம்

மன அழுத்தத்தைச் சீர்படுத்தி, மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும், புதுவகை ஃபில்ட்டர் ஒன்றை கனடா தனியார் நிறுவனம் அறிமுகம்செய்துள்ளது. இந்த ஃபில்டரின் சந்தை மதிப்பு ரூ.2,500. 

தண்ணீர்

கனடாவின் வான்கூவர் நகரத்தில், கடந்த வாரம் `கார் ஃப்ரி டே' என்ற கண்காட்சி நடந்தது.  அந்த விழாவில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் பொருள்களைச் சந்தையில் அறிமுகப்படுத்தினர்.  அதில், புதியவகை ஹாட் டாக் ஃபில்ட்டர் பொருத்தப்பட்ட தண்ணீர்  பாட்டில்கள் அறிமுகம்செய்யப்பட்டன. `நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டிலில் ஹாட் டாக்  ஃபில்ட்டரை போட்டுக் குடித்தால், மூளை புத்துணர்ச்சி அடையும்' என்று விளம்பரம் செய்யப்பட்டது. `ஹாட் டாக் வாட்டர்' என்ற புதிய குடிநீர் ஃபில்ட்டரை, இதே பெயருள்ள நிறுவனம் ஒன்று வெளியிட்டது. இந்தப் பாட்டில்களைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

இதுகுறித்துப் பேசும் ஹாட் டாக் வாட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டக்ளஸ் பென்ஸ், `சந்தையின் தேவைகளுக்காக இயந்திரமாகச் சுழன்று பணிபுரிகிறோம். வேலைப் பளு அதிகரிப்பால் மன அழுத்தம், உடல் சோர்வு ஏற்படுகிறது. இதனால், உடல் எடையும் அதிகரிக்கிறது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் ஏராளமான குடிநீர் பானங்கள் சந்தைக்கு வந்துள்ளன. ஆனால், இவற்றில் இருந்து ஹாட் டாக் வாட்டர் முற்றிலும் மாறுபட்டது. இதைப் பருகினால் உடல் எடை குறையும்; மன அழுத்தம் சீராக்கப்படும்; மூளை செயல்பாடுகளை அதிகரிக்கச்செய்யும்; வாழ்நாள் அதிகரித்து, எப்போதும் இளமையாக இருக்க முடியும்' என்றார். 'அவரது இந்தக் கருத்து அறிவியல்பூர்வமாகச் சரியானதா?' என நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!