`அநாகரிகமாக உடை அணிந்தார்' - பெண் நிருபர்மீது விசாரணைக்கு உத்தரவிட்ட சவுதி அரசு!

சவுதி அரேபியாவில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக ஆடை விலகிய காரணத்துக்காக பெண் நிருபர்மீது விசாரணை நடந்து வருகிறது. 

பெண் நிருபர்

சமீபத்தில், சவுதி அரேபியாவில் மன்னர் சல்மானின் இளைய மகனான முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றார். இதையடுத்து, அங்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், பல ஆண்டுகளாக அங்கு பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறார். அப்படி சமீபத்தில் தளர்த்தப்பட்ட விதிதான், பெண்களும் கார் ஓட்டலாம். கடந்த 24-ம் தேதி இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. 

இதனால், சவுதியில் பல பெண்கள் கார் ஒட்டி, அதைப் புகைப்படங்களாகப் பகிர்ந்துவருகின்றனர். இதுதொடர்பான செய்திகளை இரண்டு நாள்களுக்கு முன்பு சவுதியின் அல் ஆன் டி.வி சார்பில் பெண் தொகுப்பாளர் ஷிர்ரீன் அல்-ரிபாய், ரோட்டில் நடந்தவாறே வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வேகமாகக் காற்றுவீசியது.  அதனால், அவர் அணிந்திருந்த ஆடை வெளியில் தெரிந்தது. உடனடியாக அதை அவர் சரிசெய்துகொண்டார். ஆனால், இந்தக் காட்சிகளைப் பார்த்த அதிகாரிகள், ஷிர்ரீன் அநாகரிகமாக உடை அணிந்ததாகக் கூறி, அவர்மீது விசாரணைக்கு உத்தரவிட்டனர். எனினும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!