அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு..! 5 பேர் பலி

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் 'த கேபிட்டல்' என்ற செய்தித்தாள் நிறுவனத்தில் நடத்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு செய்தியாளர்கள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 

துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னபோலிஸ் பகுதியில் செயல்பட்டுவருகிறது 'த கேப்பிட்டல்' என்ற தினசரி செய்தித்தாள். அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்குள் அமெரிக்க நேரப்படி மாலை 3 மணி அளவில் நுழைந்த ஒருவன், அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் செய்தி  அறையை நோக்கிச் சரமாரியாக சுட்டான். அதில், 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் 4 பேர் செய்தியாளர்கள் என்றும் மற்றொருவர் மேலாளர் என்றும் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர், 2012-ம் ஆண்டு 'த கேபிட்டல்' பத்திரிகையின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் தோற்றுப்போனதால் ஆத்திரத்தில் இப்படிச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில் செய்தி அலுவலகத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரியத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!