`பாகிஸ்தானை தனிமைப்படுத்துகிறார்' - மோடியை குற்றம் சாட்டும் இம்ரான் கான்!

மோடி பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்ரோஷமான கொள்கைகளை கொண்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

இம்ரான் கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தலைமையின் கீழ், 1992-ம் ஆண்டு, பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை வென்றது. இதையடுத்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கிய அவர், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். அதன்படி, ஆளுங்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் இவர், தொடர்ந்து தீவிர அரசியலில் உள்ளார். இதற்கிடையே, வரும் 25ஆம் தேதி பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள இம்ரான், பாகிஸ்தானில் தொடர் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய பிரதமர் மோடியை தாக்கி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ``பாகிஸ்தான் அதிபராக இருந்த நவாஸ் ஷெரிப் இந்தியாவுடன் நட்புறவை மேம்படுத்த விரும்பினார். 

அதற்காக அனைத்து வழிகளிலும் அவர் முயற்சி மேற்கொண்டார். அதன்காரணமாகவே கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடியை தனது வீட்டு விருந்தாளியாக அழைத்து வந்தார். ஆனால் இருநாடுகள் இடையேயான நட்புறவு மோசமடைவதற்கு பாஜக அரசு முயன்று வருகிறது. பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் கொள்கையே அக்கட்சி கொண்டுள்ளது. பிரதமர் மோடியும்  பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்ரோஷமான கொள்கைகளை கொண்டுள்ளார். காஷ்மீரில் அவர்கள் செய்கின்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு பிரதமர் மோடி பாகிஸ்தானை குற்றம் சாட்டி வருகிறார். இதேபோல், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளால் 2016-ல் நடத்தப்பட்ட பதன்கோட் தாக்குதல், அதே ஆண்டு உரி ராணுவ முகாம் தாக்குதல் ஆகியவை இருநாட்டு உறவில் விரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது" என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!