வெளியிடப்பட்ட நேரம்: 21:26 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:15 (07/07/2018)

இங்கு அமைச்சர்கள்... அங்கு அதிகாரிகள்... ஜெயலலிதாவுக்கும், ட்ரம்ப்க்கும் ஒரே ஃபார்முலாதான்!

ட்ரம்ப் தனக்கு சரிபட்டு வராத அதிகாரிகளை ``நீங்கள் இனி தேவையில்லை'' என்ற மனநிலையில் பதவியை விட்டு தூக்கிவிடுகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் 38 அதிகாரிகளை பதவியை விட்டு நீக்கியுள்ளார்.

இங்கு அமைச்சர்கள்... அங்கு அதிகாரிகள்... ஜெயலலிதாவுக்கும், ட்ரம்ப்க்கும் ஒரே ஃபார்முலாதான்!

மிழக அமைச்சரவையில் அ.தி.மு.க ஆட்சியென்றால் எதிர்கட்சியைவிட ஆளுங்கட்சியினர்தான் மிகவும் கவனமாக இருப்பார்கள். அதிலும் அமைச்சர்கள் அதீத கவனத்துடன் செயல்படுவார்கள். கொஞ்சம் சரியாக செயல்படாவிட்டாலும் அமைச்சர் பதவியே பறிபோகிவிடும் என்பதுதான் அவர்களின் கலக்கத்துக்கு காரணம். இதே நிலையில்தான் இன்று அமெரிக்க அதிபருக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளுக்கும். ட்ரம்ப் தனக்கு சரிப்பட்டு வராத அதிகாரிகளை ``நீங்கள் இனி தேவையில்லை'' என்ற மனநிலையில் பதவியை விட்டு தூக்கிவிடுகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் 38 அதிகாரிகள் பதவியை விட்டு நீக்கப்பட்டோ அல்லது அவர்களே ராஜினாமா செய்துவிட்டோ சென்றுள்ளனர். அதில் 11 பேரை அமெரிக்க அரசு வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கியுள்ளது. 

ட்ரம்ப்

சாலி யேட்ஸ்:

அதிபரின் முதல் அட்டர்னி ஜெனரல்
பதவி விலகிய நாள்: 30 ஜனவரி 2017
பதவியிலிருந்த நாள்கள்: 10 நாள்கள்

ட்ரம்பின் இஸ்லாமிய நாடுகளுக்கான தடைவிதிப்பை ஏற்க மறுத்தார் என்ற காரணத்துக்காக அதுகுறித்து கருத்து வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.


விவேக் மூர்த்தி:

அதிபரின் முதல் சர்ஜன் ஜெனரல்
பதவி விலகிய நாள்: 21 ஏப்ரல் 2017
பதவியிலிருந்த நாள்கள்: 91 நாள்கள்

ஒபாமா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்டவர். துப்பாக்கி அசோஷியேசன் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து பேசிய சிறிது காலத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


ஏஞ்செலா ரெய்ட்:

வெள்ளை மாளிகையின் தலைமைப் பணியாளர் 
பதவி விலகிய நாள்: 1 மே 2017
பதவியிலிருந்த நாள்கள்: 101 நாள்கள்

இந்தப் பதவிக்கு வந்த முதல் பெண் இவர்தான். இவரை 2011-ம் ஆண்டு ஒபாமா நியமித்தார். ஃபர்ஸ்ட் லேடி மெலனியா ட்ரம்பின் தலையீட்டால் முக்கியப் பதவிகள் அவருக்கு விருப்பமானவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதனால் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


ஜேம்ஸ் கோமே:

எஃப்.பி.ஐ இயக்குநர்
பதவி விலகிய நாள்: 9 மே 2017
பதவியிலிருந்த நாள்கள்: 109 நாள்கள்

கிளாரி கிளின்டனின் இமெயில் விவகாரம் அதிபர் தேர்தலுக்கு 11 நாள்கள் முன்னதாக வெளியானது. மே 2017ல் தனிப்பட்ட முறையில் ரஷ்ய குறுக்கீடு குறித்து கருத்து தெரிவித்த காரணத்துக்காக பதவிவிலக்கப்பட்டார்.


ஆன்டனி ஸ்க்ராமுகி:

வெள்ளை மாளிகை தகவல்தொடர்பு இயக்குநர்
பதவி விலகிய நாள்: 31 ஜூலை 2017
பதவியிலிருந்த நாள்கள் : 10 நாள்கள்

21 ஜூலை 2017ல்தான் இவர் பதவிக்கு வந்தார். வெள்ளை மாளிகையில் தன்னுடன் வேலை செய்யும் அதிகாரி பற்றி அவதூறு பரப்பிய காரணத்துக்காக 10 நாள்களிலேயே பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் ஆபாசமான மொழியில் இருந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.


கெய்த் ஸ்கில்லர்:

ஓவல் அலுவலக செயல் அதிகாரி
பதவி விலகிய நாள்: 20 செப்டம்பர் 2017
பதவியிலிருந்த நாள்கள்: 243 நாள்கள்

ட்ரம்பின் நீண்ட நாள் பாதுகாவலராக இருந்தவர். வெள்ளை மாளிகையில் இருக்கும் பலரை எனக்குப் பிடிக்கவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதனால் அவரின் பதவி பறிக்கப்பட்டது.


ஜான் மெக்கென்டி:

அதிபரின் தனி அலுவலர்
பதவி விலகிய நாள்: 12 மார்ச் 2018
பதவியிலிருந்த நாள்கள்: 416 நாள்கள்

ட்ரம்பின் பிரசார அணியில் இருந்தவர் மற்றும் பிரசார பயணங்களுக்கு இயக்குநராகவும் இருந்தார். தன் பணியைச் செய்வதில் தொடர்ந்து சிரமம் இருப்பதை தெரிவித்ததால் அவர் பாதுகாப்புப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். 


ரெக்ஸ் டிளெர்சன்:

மாகாண செகரட்ரி
பதவி விலகிய நாள்: 13 மார்ச் 2018
பதவியிலிருந்த நாள்கள் : 405 நாள்கள்

அதிபரை கெட்ட வார்த்தையில் திட்டியதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 


ஸ்டீவ் கோல்ட்ஸ்டீன்:

மாகாண செகரட்ரி
பதவி விலகிய நாள்: 13 மார்ச் 2018
பதவியிலிருந்த நாள்கள் : 99 நாள்கள்

ரெக்ஸ் டிளெர்சன் பதவி விலகியது ஏன் எனத் தெரியவில்லை எனத் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து தெரிவிக்க, இவர் பதவியும் பறிக்கப்பட்டது. 


ஆன்ட்ரூ மெக்காப்:

எஃப்.பி.ஐ துணை இயக்குநர்
பதவி விலகிய நாள்: 16 மார்ச் 2018
பதவியிலிருந்த நாள்கள் : 420 நாள்கள்

ரஷ்ய குறுக்கீடு குறித்து கருத்து தெரிவித்த காரணத்தினால் பதவி விலக்கப்பட்டார். கூடுதலாக 28 மணி நேரம் பதவியில் இருந்திருந்தால் அவர் ஓய்வு பெற்றிருப்பார்.


டேவிட் ஸ்கூல்கின்:

செகரட்ரி
பதவி விலகிய நாள்: 16 மார்ச் 2018
பதவியிலிருந்த நாள்கள் : 420 நாள்கள்

அதிபருடனான கருத்து வேறுபாடு காரணமாகவும், சர்ச்சைகளில் சிக்கியும் பதவி நீக்கப்பட்டார். 


டிரெண்டிங் @ விகடன்