பிளாஸ்டிக்கை அழிக்க வரும் புதிய `மூங்கில் ஸ்ட்ராக்கள்'! | Bamboo Straws to replace Plastic Straws

வெளியிடப்பட்ட நேரம்: 04:01 (09/07/2018)

கடைசி தொடர்பு:07:56 (09/07/2018)

பிளாஸ்டிக்கை அழிக்க வரும் புதிய `மூங்கில் ஸ்ட்ராக்கள்'!

ஒரு மூங்கில் ஸ்ட்ராவின் விலை 50 பைசா மட்டுமே. பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் போல் ஒரு முறை உபயோகப்படுத்திவிட்டு தூக்கிப் போட வேண்டிய அவசியமில்லை.

பிளாஸ்டிக் பெரும் கேடு. மனிதனுக்கும், மண்ணுக்கு, மண்ணில் வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் பிளாஸ்டிக் பெரும் கேட்டை விளைவிக்கிறது. பிளாஸ்டிக்கை அழிக்க உலகம் முழுக்கவே பல நாடுகளும், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. தவிர்க்க முடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக இயற்கைச் சார்ந்த பொருள்களை உருவாக்கும் முயற்சிகள் உலகம் முழுக்கவே நடந்துகொண்டிருக்கின்றன. 

மூங்கில் ஸ்ட்ராக்கள்

அந்த வகையில், நாம் அன்றாடம் அதிகம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்குப் (Plastic Straws) பதிலாக, மூங்கிலில் ஸ்ட்ரா செய்யும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர் அந்தமானில் இருக்கும் பொடானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா (Botanical Survey of India) நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். 

அந்தமான் தீவுகள் - பிளாஸ்டிக் ஸ்ட்ரா

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே கிடைக்கப்பெறும் ஒருவகையான மூங்கில் `Schizostachyum andamanicum'. இது 20 வருடங்களுக்கு முன்னர், அந்தமானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஸ்ட்ராக்களை எல்லா வகை மூங்கிலிலும் இருந்து உருவாக்கிட முடியாது. அந்தமானில் கிடைக்கும் மூங்கிலில் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதற்கு முக்கியக் காரணம், மெலிதாகவும், நீளமாகவும் இருக்கும் அதன் தன்மை. கடந்த 2011-ம் ஆண்டே இது குறித்த ஆராய்ச்சிகளை முழுவீச்சில் தொடங்கிவிட்டனர். விரைவில் இதை சந்தைப்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்படவுள்ளன. 

மூங்கில் ஸ்ட்ரா

ஒரு மூங்கில் ஸ்ட்ராவின் விலை 50 பைசா மட்டுமே. பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் போல் ஒரு முறை உபயோகப்படுத்திவிட்டு தூக்கிப் போட வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு அதைத் தொடர்ந்து உபயோகிக்கவும் செய்யலாம். இது இந்த மண்ணுக்கும், உடலுக்கும் பெரிய நன்மை பயக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க