ஜப்பானைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம்..! 120 பேர் பலி; தொடரும் மீட்புப் பணி

ஜப்பான் நாட்டில் பெய்த தொடர் மழையின் காரணமாக இதுவரையில் 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 

வெள்ளம்

ஜப்பான் நாட்டிலுள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே ஆகிய மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்தாலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. அதனால், வாகனங்கள் நீருக்குள் அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கும் அதிகமானோர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை 5 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் மட்டும் 364 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது ஜூலை மாதத்துக்கான மழைப் பதிவைவிட 1.5 மடங்கு அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, மழை ஓய்ந்திருந்தாலும் வெள்ளப்பெருக்கு மீட்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. மீட்புப் பணியில் சுமார் 73,000 பேர் வரை ஈடுபட்டுள்ளனர். மழை பாதிப்பின் காரணமாக வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீட்புப் பணி குறித்து தெரிவிக்கும்போது, 'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசுகள் உடனடியாக வழங்கும்' என்று தெரிவித்தார். இன்னமும் 70,000 பேர்வரை மின் இணைப்பு இல்லாமல் தவித்துவருகின்றனர். மழைக்கு 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Photo crdit: AFP

Do you like the story?

Please Appreciate the Author by clapping!