முதல் இடம்பிடித்த ட்ரம்ப்..! மோடிக்கு 3-வது இடம்.. இது ட்விட்டர் ரேஸ்!

மோடி

மூகவலைதளங்களில் பிரபலங்களின் வாசஸ்தளமாகிவிட்டது ட்விட்டர். கருத்துகள், விமர்சனங்கள், அறிவிப்பு, புகைப்படங்கள் எனப் பல விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்துவருகிறார்கள் பிரபலங்கள். உலகம் முழுக்க ஏராளமானோர் ட்விட்டரை பின்தொடர்ந்து வருகின்றனர். அதில், அதிகம்பேரால் பின்தொடரப்படும் பிரபலங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் இடம்பிடித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

12 மாத இடைவெளியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பை உலகளவில் 5.2 கோடி பேருக்கு மேல் பின்தொடர்கிறார்கள். இரண்டாவது இடத்தில் போப் ஃபிரான்சிஸ் இருக்கிறார். அவரை 4.75 கோடி பேருக்கு மேல் பின்தொடர்கின்றனர். மூன்றாவது இடம் பிடித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை 4.3 கோடி பேருக்கு மேல் பின்தொடர்ந்து வருகின்றனர். முதல் பத்து இடங்களில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம் இடம் பிடித்துள்ளார். உலக நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களிலேயே அதிக நபர்களால் ட்விட்டரில் பின்தொடரப்படும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!