66 ஆண்டுகளுக்குப் பிறகு நகங்களை வெட்டிய கின்னஸ் சாதனையாளர்!

இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலல் என்ற முதியவர் கின்னஸ் சாதனை படைத்த தன் நகங்களை 66 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வெட்டியுள்ளார்.

கின்னஸ்

புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலல் என்ற முதியவர் தன் பிரமாண்டமான நகத்தின் மூலம் ‘உலகிலேயே மிகப் பெரிய விரல் நகங்கள் கொண்ட நபர்’ என்ற பெருமையுடன் கடந்த 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்தார். இவர் 1952-ம் ஆண்டு முதல் நகம் வெட்டுவதை நிறுத்தியுள்ளார். தற்போது இவருக்கு வயது 82. சுமார் 66 வருடங்களாக தன் நகங்களை வெட்டாமல் மிகவும் கவனமாக வளர்த்துள்ளார். இதனால் இவரின் பல வேலைகள் தடைபட்டதாகவும் கின்னஸ் சாதனைக்காகவே அனைத்து சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இருந்ததாகவும் முன்னதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஸ்ரீதர் தன் நகங்களை வெட்டியுள்ளார். இதற்காக இவர் புனேவில் இருந்து நியூயார்க் சென்றுள்ளார். அங்கு டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ரிப்லைஸ் பிலீவ் இட் ஆர் நாட் (Ripley's Believe It or Not) என்ற அருங்காட்சியத்தில்தான் இவரின் நகங்கள் வெட்டிப் பாதுகாக்கப்பட உள்ளன. இவரின் நகங்கள் வெட்டப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இவரின் நகங்கள் 909.6 செ.மீ இருந்ததாக கூறப்பட்டுள்ளது. 
 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!