வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (12/07/2018)

கடைசி தொடர்பு:20:19 (12/07/2018)

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்!

உலகிலேயே இளம் வயதில் தன் சுய முன்னேற்றத்தின் மூலம் கைல் ஜென்னர் என்ற மாடல் அழகி பில்லியனர் ஆகியுள்ளார் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இளம் பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த கைல் ஜென்னர் என்ற 20 வயது பெண் உலகிலேயே இளம் வயதில் மிகப்பெரும் பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழிலதிபர், மாடல், தொலைக்காட்சி பிரபலம், சமூகவலைதள பிரபலம் எனப் பல முகங்களைக் கொண்டுள்ள கைல் இளம் வயதில் 900 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். வெறும் மூன்று ஆண்டுகளிலேயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். இவர் அழகு சாதன நிறுவனம் நடத்தி வருகிறார். முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க்தான் இளம் வயதில் பெரும் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றிருந்தார். ஆனால், தற்போது கைல் ஜென்னர், சர்க்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்துள்ளார். 

சுய முன்னேற்றத்தின் மூலம் வளர்ந்தவர் என ஃபோர்ப்ஸ் நிறுவனம் இவரைக் குறிப்பிட்டுள்ளதற்கு பலரும் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெறும் அழகுசாதன நிறுவனம் மற்றும் மாடலிங்கில் மட்டுமே கைல் இவ்வளவு சம்பாதித்திருக்க வாய்ப்பில்லை அவர் பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் அவரது நிறுவனத்தில் பங்குதாரர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது எனத் தொடர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.