இன்று கைது செய்யப்படுவாரா பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்?!

நவாஸ்

'னாமா பேப்பர்' விவகாரத்தில் சிக்கிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தீர்ப்பளித்தது. நீதிபதி முகமது பஷீர் வெளியிட்ட தீர்ப்பில் நவாஸ் ஷெரீஃப்க்கு பத்து வருட சிறைத்தண்டனையும், அவரின் மகள் மரியம் ஷெரீஃப்-க்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், லண்டனில் சிகிச்சைப் பெற்றுவரும் நவாஸ் ஷெரீஃப்பின் மனைவி குல்சூம் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், நவாஸும், அவரது மகளும் லண்டன் சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் இன்று பாகிஸ்தான் திரும்ப இருப்பதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் வைத்தே நவாஸ் ஷெரீஃப்பையும், அவரின் மகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமாபாத் அல்லது லாகூர் விமான நிலையங்களில் ஏதாவது ஒன்றில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பிருப்பதால் இரண்டு விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்கு இரண்டு இடங்களிலும் ஹெலிகாப்டர் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட உள்ளது. அவர்களை ராவல்பிண்டி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!