பழமையான லார்ட்ஸ் மைதானத்தில் பசுமையாக மலர்ந்த காதல்!

லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஒரு காதல் காட்சி தனது கிளைமாக்ஸை எட்டியுள்ளது.

காதல்

Photo Credit: https://twitter.com/Sassy_Soul_

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பழம்பெருமைக் கொண்ட லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிக்கொண்டிருந்தது. இந்தக்காட்சிகளை படம் பிடித்துக்கொண்டிருந்த கேமராமேன் தனது கேமராவை சற்று ஸ்டேடியம் பக்கம் திரும்பினார். அங்கு ஒரு காதல் காட்சி தனது கிளைமாக்ஸை எட்டிக்கொண்டிருந்தது. மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென காட்டப்பட்ட காதல் காட்சியில் ஆர்வமாகினர்.  இளைஞர் ஒருவர் தோழியிடம் தனது காதலை தெரிவித்துக்கொண்டிருந்தார். மண்டியிட்டு காத்திருந்த அந்த இளைஞருடன் மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் பதிலுக்காக காத்திருந்தனர். அந்தப்பெண் பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஆரத்தழுவி கட்டியணைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள் இவர்களது திருமணம் லார்ட்சில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவத்தொடங்கியது. இவர்களுக்கு ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

கிரிக்கெட்டை நேசிக்கும் ஒருவனுக்கு 200 வருட பாரம்பரியம் கொண்ட லார்ட்சில் காதல் நிறைவேறியது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது போல். வெற்றி, தோல்வி, கண்ணீர், கொண்டாட்டம் இவைகளுடன் இந்தப் பசுமையான காதலையும் லார்ட்ஸ் சுமந்து நிற்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!