சவுதி அரேபியாவில் பாடகரை கட்டிப்பிடித்தற்காகக் கைது செய்யப்பட்ட பெண்!

சவுதி அரேபியாவில் பாடகர் ஒருவரை மேடை ஏறி கட்டிப்பிடித்ததற்காக அந்நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடகர்

சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருவதால் சட்டங்கள், விதிகள் ஆகியவை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்களுக்கு மிக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது முகமது பின் சல்மான் இளவரசராகப் பதவியேற்ற பிறகு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் உள்படப் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார். பெண்கள் வெளியில் செல்ல அனுமதி, கார் ஓட்ட அனுமதி, ஓட்டுநர் உரிமம் பெற அனுமதி, வெளி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளை காண அனுமதி எனப் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள தைஃப்  நகரில் நடைபெற்ற ஒரு கலைநிகழ்ச்சியில், அந்நாட்டில் மிகவும் பிரபலமான பாடகரான மஜித்-அல் மோஹன்திஸ் மேடையில் பாடிக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாகக் கீழே அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென மேடையேறி அந்தப் பாடகரை கட்டியணைத்துள்ளார்.  இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  சவுதியில் பொது இடங்களில் தனக்கு உறவில்லாத ஆணுடன் ஒரு பெண் பேசவே அனுமதி கிடையாது. அப்படி இருக்க பொது நிகழ்ச்சியில் ஒரு ஆணைக் கட்டிப்பிடித்த பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

‘அரேபியாவின் பாடல் இளவரசர் ’என அனைவராலும் அழைக்கப்படுபவர் மோஹந்திஸ். இரான் நாட்டைச் சேர்ந்தவரான இவர் சவுதியின் குடியுரிமையும் பெற்றுள்ளார். மிகவும் பிரபலமான இவரைப் பெண் ஒருவன் கட்டியணைத்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!