வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (16/07/2018)

கடைசி தொடர்பு:12:42 (16/07/2018)

`உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையைத் தட்டிச்சென்ற புதுச்சேரி’- இது உளறல் இல்லை உண்மை!

கிரண்பேடி

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸ் அணிக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்த வித்தியாசமான வாழ்த்து, வைரலாகிவருகிறது.

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் விறுவிறு இறுதி ஆட்டம் நேற்று நடந்து முடிந்தது. குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.  பிரான்ஸ் அணிக்கு, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான கிரண் பேடி வித்தியாசமான வாழ்த்தைப் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரான்ஸ் அணியின் வெற்றிகுறித்து ட்வீட் செய்த கிரண் பேடி, `புதுச்சேரி மக்களான நாம் (முன்னாள் ஃப்ரெஞ்ச் பிரதேசம்) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம். வாழ்த்துகள் நண்பர்களே. புதுச்சேரியிலும் கால்பந்து போட்டிகள் நடத்த வேண்டும். நமது பிரான்ஸ் அணியைப் போன்று நாமும் சாதிக்க வேண்டும்’ என்று உருக்கமாக(!)ப் பதிவிட்டு, புதுச்சேரியை பிரான்ஸ் நாட்டுடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க-வைச் சேர்ந்த கிரண் பேடி இவ்வாறு பதிவிட்டதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.

கிரண் பேடி
 

`நாம் இந்தியர்கள். பப்ளிசிட்டிக்காக இப்படியெல்லாம் ட்வீட் செய்வதை முதலில் நிறுத்துங்கள்’, ‘நாம் ஃப்ரெஞ்ச் காலனித்துவ மக்கள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், முட்டாள்களான நாங்கள் உங்களை டெல்லியில் முதல்வராக்க கனவு கண்டுகொண்டிருக்கிறோம்’. இவ்வாறு நெட்டிசன்ஸ் கொந்தளித்துவருகின்றனர்.

கிரண் பேடி
 

தனது ட்விட்டர் பதிவை நியாயப்படுத்தும் விதமாக, கிரண் பேடி இன்று காலை மீண்டும் ஒரு ட்வீட் தட்டியுள்ளார்.

கிரண் பேடி

`புதுச்சேரி மக்களான நாம், பிரான்ஸ் அணி ஜெயிக்க வேண்டும் என்று எண்ணினோம். காரணம், புதுச்சேரிக்கும் பிரான்ஸுக்கும் ஒரு வரலாற்றுப் பந்தம் இருக்கிறது. புதுச்சேரிக்கு பல்வேறு விதங்களில் பிரான்ஸ் உதவிசெய்துவருகிறது’ என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார். கிரண் பேடி விளக்கம் கொடுத்த பின்னரும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் குறைந்தபாடில்லை. அவரின் ட்விட்டர் பக்கத்தில் கடுமையான சொற்களால் இணையவாசிகள் விமர்சித்துவருகின்றனர். திட்டுபவர்களில் பாதிப்பேர், பா.ஜ.க-வினர் என்பதுதான் ஹைலைட்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க