வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்..! - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ | A man walked 20 miles for Job; Now getting new car

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (18/07/2018)

கடைசி தொடர்பு:18:38 (18/07/2018)

வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்..! - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ

அமெரிக்காவின், அலபாமா நகரில், வேலையில் சேர்வதற்காக 20 மைல் தூரம் நடந்துசென்றவருக்கு, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, அவரது சொந்தக் காரை பரிசாக அளித்துள்ளார். 

இளைஞர் வால்டர் கார்

அலபாமாவை சேர்ந்தவர், பட்டதாரி இளைஞர் வால்டர் கார். அவருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்குச் செல்வதற்காக, முந்தைய நாள் இரவில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கார் ரிப்பேராக இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, வேலையில் சேர்வதற்காக அந்த இரவே நடக்கத் தொடங்கினார். அவர் வசித்து வந்தது நகருக்கு சற்று வெளியே என்பதால் வேறு வாகன வசதி இல்லை. அவரிடம் காரை சரி செய்யும் அளவுக்கு பணமும் இல்லை. அதனால் இரவு முழுவதும் சுமார் 20 மைல் தூரம் நடந்து, ஹோம்உட் என்ற பகுதியிலிருந்து பெல்ஹாம் என்ற பகுதிவரை நடந்துள்ளார்.

இளைஞர் வால்டர் கார்

அப்போது, அந்த வழியாக வந்த பெல்ஹாம் பகுதி காவல்துறையினர், காவல்துறை வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அவருக்கு, உணவு அளித்து, ஜெனிஃபர் லேமி என்பவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். வால்டர் கார், நடந்த வந்த கதையைக் கேட்ட ஜெனிஃபர், அந்தச் சம்பவத்தைப் பற்றி உருக்கமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அவருடைய பதிவு, ஒரே நாளில் வைரலானது. அந்தப் பதிவை, வால்டர் கார், வேலைக்குச் சேர்ந்த பெல்ஹூப்ஸ் மூவிங் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும் பார்த்துள்ளார். உடனே வால்டரை, அழைத்த நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, வால்டருக்கு அவருடைய சொந்தக் காரை பரிசாக அளித்தார்.