`இதுதான் எங்கள் லட்சியம்!’ - குகையிலிருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்களின் பதில்

தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் செய்தியாளர்களின் சந்திப்பின்போது நீர்மூழ்கி வீரனாவேன் என தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து

தாய்லாந்தில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு குகையிலிருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.  இந்த சந்திப்பின்போது மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும், மீட்கப் போராடிய மூன்று நீர்மூழ்கி வீரரும் உடனிருந்தனர். இந்தச்சந்திப்பின்போது செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகளை முன்வைத்தனர். இவை அனைத்துக்கும் அவர்கள் பதிலளித்தனர். சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் தங்களை சுய அறிமுகம் செய்தனர்.பின்னர் கேள்விகள் தொடர்ந்தது.

பிரிட்டிஷ் நீர்மூழ்கி வீரர்களைக் கண்டதும் உங்களுக்கு எப்படி இருந்தது?

குகைக்குள் ஏதோ சத்தம் கேட்டது. நன்கு கவனித்தபோது  ‘யாராவது இருக்கீங்களா’ என்று கேட்டது. எங்களால் நம்பமுடியவில்லை. நாங்கள்  ‘ஹலோ’ என்று கத்தினோம். அவர்கள் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் நலமாக இருப்பதாக கூறினோம்.

பசியாக இருந்தபோது என்ன நினைத்தீர்கள்?

அப்போது ஒரு சிறுவன்தான் ப்ரைட் ரைஸ் குறித்து நினைத்ததாக தெரிவித்தான். குகைகளில் கிடைத்த சுத்தமான தண்ணிரை குடித்தோம். உணவுகள் எதும் கிடைக்கவில்லை. குகைகளில் இருந்து தண்ணீர் வெளியேறியவுடன் வெளியில் செல்லலாம் என இருந்தோம்.

தாய்லாந்து

Photo Credit: https://twitter.com/nativejar

தங்களைக் காப்பாற்ற வந்த நீர்மூழ்கி வீரர் மரணம் குறித்து உறுக்கமாகப் பேசினர். அவர் எனக்கு அப்பா மாதிரி என ஒரு சிறுவன் உருக்கமாக பேசினான். குகையில் சிக்கி இருந்தபோது அவர் என்னைக் குழந்தை என அழைத்தார் எனக் கூறினான். நாங்கள் ஒரு குற்றவாளிபோல் உணர்வதாக பயிற்சியாளர் தெரிவித்தார்.

உங்களது கனவு என்ன?

நான் ஒரு கால்பந்தாட்ட வீரனாக வேண்டும் என சிறுவன் டைடன் கூறினான். 4 சிறுவர்கள் நீர்மூழ்கி வீரராக வேண்டும் என தங்களது ஆசையை தெரிவித்தனர்.

மீண்டும் குகைக்குச் செல்வீர்களா?

ஒரு நல்ல வழிகாட்டியுடன் குகைக்குச் செல்வேன் என சிலர் தெரிவித்தனர். ஒரு சிறுவன் திரும்ப குகை பக்கமே செல்ல மாட்டேன் என்றார். மேலும் சிலர் குகையில் இருக்கும்போது வீட்டுப்பாடங்களை நினைத்து வருந்தியதாக நகைச்சுவையுடன் கூறினர்.

உங்கள் பெற்றோருக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

அனைவரும் ஒருமித்த குரலில் மன்னிப்புக் கேட்க உள்ளதாகத் தெரிவித்தனர். சில சிறுவர்கள் நாங்கள் கால்பந்து பயிற்சிக்குச் செல்லவதாகதான் சொன்னோம் குகை பற்றி வாய்த்திறக்கவில்லை என்றனர். சிலர் எங்களது வீட்டில் தெரிவித்தோம். பெற்றோர்கள் அது மோசமான இடம் என தெரிவித்ததாக கூறினர்.

குகையிலிருந்து யாரெல்லாம் முதலில் வெளியே செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்தது யார் என்ற கேள்விக்குப் பதிலளித்த பயிற்சியாளர் அகி, குகையிலிருந்து வெளியே செல்ல வேண்டும் என்ற போட்டி எனது மாணவர்களிடையே இல்லை என்று கூறினார். மேலும், குகையில் அதிக நாள் யார் தங்கியிருந்தார்களோ, அவர்களை முதலில் அனுப்ப முடிவு செய்தோம் என்று விளையாட்டாகக் கூறினார். 

சிறுவர்களின் உடல்நலம் குறித்துப் பேசிய மருத்துவர்கள். ``சிறுவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். வீட்டு உணவுகளை உண்பதற்கு தயாராகி வருகிறார்கள். அவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். அவர்களின் மனநிலை சிறப்பாக உள்ளது” என்றனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!