வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (21/07/2018)

கடைசி தொடர்பு:11:39 (21/07/2018)

`இறந்த தந்தையின் உடல் முன் செல்ஃபி எடுத்த மாடல் அழகி!' - குவியும் கண்டனங்கள்

இறந்த தந்தையின் உடல் முன் செல்ஃபி எடுத்த செர்பிய மாடல் அழகிக்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. 

செல்ஃபி

photo credit: the sun

செர்பியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஜெலிகா லுாபியிக். இவர், பாடகராகவும் உள்ளார். இவரின் தந்தை, உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு, கடந்த இரண்டு நாள்களுக்கு முன் இறந்துவிட்டார்.  தந்தை இறந்ததைப் பற்றி கவலைப்படாத ஜெலிகா, லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மரணமடைந்த தந்தையின் உடல்முன் செல்ஃபி எடுத்து, அதைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கூடவே, ``எவ்வளவு காலம் நாம் வாழ வேண்டும் என்பதை நாம் முடிவுசெய்ய முடியாது. வாழ்க்கையின் 67-வது ஆண்டில் அவர் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். எல்லாவற்றுக்கும் நன்றி. நான் உங்கள் மகளாக இருப்பதற்கும், நீங்கள் என் அப்பாவாக இருப்பதற்கும் நன்றியுடன் இருக்கிறேன். எங்களை சரியான பாதையில் கொண்டுவந்ததற்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள். நிம்மதியாகத் தூங்குங்கள்" என அவர் பதிவிட்டுள்ளார். 

எனினும், அவர் செல்ஃபி பதிவிட்ட சிறிது நேரத்திலேயே, அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. பலரும் இன்ஸ்டாகிராமில் அவரை வசைபாடினர். ``மனநிலை சரியில்லாதவர்கள்தான் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள்; போட்டோ பார்த்ததிலிருந்தே தெரிகிறது, எவ்வாறு தந்தையை கவனித்துள்ளீர்கள் என்று"  இப்படி கடுமையான வார்த்தைகளால் இன்ஸ்டாகிராம் வாசிகள் திட்ட ஆரம்பிக்க,  ஜெலிகா உடனடியாக அந்தப் பதிவை நீக்கினார். இருந்தாலும், அவர் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த இன்ஸ்டாகிராம் பயனாளர்கள், தொடர்ந்து அவருக்கு கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க