ருவாண்டாவுக்கு 200 மில்லியன் டாலர் கடன்: பிரதமர் மோடி அறிவிப்பு

ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி ருவாண்டாவுக்கு கடனுதவியாக 200 மில்லியன் டாலரையும், ருவாண்டா கிராம மக்களுக்கு பரிசாக 200 பசுக்களையும் வழங்க உள்ளார். 

பிரதமர் மோடி ருவாண்டா அதிபர்

பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா நாட்டில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி ருவாண்டாவின் அதிபர் பால் ககமேவை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, வர்த்தகம், வேளாண்மை, பால் உற்பத்தி உட்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

இந்த ஒப்பந்தத்துக்குப் பின்பு பேசிய பிரதமர் மோடி, ``ருவாண்டாவின் வளர்ச்சிக்கு இந்தியா துணை நிற்கும். தொழில் வளத்தை மேம்படுத்த 200 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்படும். விரைவில் ருவாண்டாவில் இந்தியாவின் தூதரகம் திறக்கப்படும்" என்று அறிவித்தார். ருவாண்டாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள வீட்டுக்கு ஒரு பசு திட்டத்தின் கீழ், இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி இலவசமாக 200 பசுக்கள் வழங்க உள்ளார். 

இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடந்து வரும் வேளையில், பிரதமர் மோடி வெளிநாட்டில் பசுக்களைப் பரிசாக வழங்கி உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!