நிறுவனத்தை இழுத்து மூடும் இவான்கா ட்ரம்ப்! - காரணம் என்ன? | ivanka trump decided to shut down her company

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (25/07/2018)

நிறுவனத்தை இழுத்து மூடும் இவான்கா ட்ரம்ப்! - காரணம் என்ன?

தான் நடத்தி வந்த ஃபேஷன் நிறுவனத்தை இழுத்து மூட முடிவெடுத்துள்ளதாக அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக தமது பொறுப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். 

இவான்கா ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றப் பிறகு, வரி விதிப்பில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, தொழில் நிறுவனங்களுக்கு பலதரப்பட்ட கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தான் நடத்தி வந்த ஃபேஷன் நிறுவனத்தை இழுத்து மூட முடிவு செய்துள்ளதாக இவான்கா ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

வணிக ரீதியாக தான் நடத்தி வந்த நிறுவனம் நன்கு சென்றுகொண்டிருக்கும் நேரத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து ஊடகங்களில் விளக்கம் தெரிவித்துள்ள இவான்கா, `வாஷிங்டனில், அடுத்த 17 மாதங்கள் கழித்து நான் மீண்டும் எனது நிறுவனத்தைத் தொடங்குவேனா என்று தெரியாது. ஆனால், எதிர்காலத்துக்கான வேலையில் முழுக் கவனத்தையும் நான் செலுத்தி வருகிறேன்' என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் நெறிமுறை சட்டங்களில் உள்ள மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான மிகுந்த கட்டுப்பாட்டுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பல முரணான கருத்துகள் எழுந்ததால் அதை முழுமையாக மூட முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.