வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (25/07/2018)

கடைசி தொடர்பு:11:35 (25/07/2018)

அடுத்த பிரதமர் யார்? பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. இவர்களில் 272 பேர் மக்களால் நேரடியாகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சியைக் கைப்பற்ற ஒரு கட்சியோ அதன் கூட்டணியோ 172 இடங்களில் வென்றாக வேண்டும். 

பாகிஸ்தான் தேர்தல் 2018

பாகிஸ்தானில் 207 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அதில் 106 மில்லியன் மக்கள் வாக்குரிமை பெற்றவர்கள். இதில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 577 மாகாண சட்டசபைத் தொகுதிகளுக்கு 8,396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், கிரிக்கெட் வீரம் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய பிரதானக் கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 342. அதில் 272 பேர் தேர்தல் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ள 70 இடங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மை வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க வேண்டுமென்றால் 172 இடங்களில் வென்றாக வேண்டும். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 85,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என நிலவரம் இருப்பதால், தொங்கு நாடாளுமன்றம் அமையக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 24 மணி நேரத்தில் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகிவிடும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க