லாகூரில் வாக்களித்த லஷ்கர் இ தாெய்பா தலைவர்..! | mumbai attacks mastermind hafiz saeed votes in pakistan election

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (25/07/2018)

லாகூரில் வாக்களித்த லஷ்கர் இ தாெய்பா தலைவர்..!

மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் தன் ஆதரவாளர்களுடன் வந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார்.

ஹபீஸ் சயீத்

photo credit : @ani

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 342 தொகுதிகளில் 3,459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியான நவாஸ் ஷெரீஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ், கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ-இன்சாப், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய பிரதானக் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலைத் தொடர்ந்து அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று காலை பலூசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள வாக்குச்சாவடி அருகில் தற்கொலைப்படை நடத்திய‌ தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 காவலர்கள் உட்பட 32 பேர் பலியாகி உள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத் லாகூரில உள்ள வாக்குச் சாவடியில்  இன்று தன் ஆதரவாளர்களுடன் புடைசூழ வந்து வாக்களித்தார். மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது.