`செவ்வாய்க் கிரகத்தில் 1.5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏரிப் படலம்..!' - தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு | the planet in Mars found a liquid lake

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (26/07/2018)

கடைசி தொடர்பு:10:40 (26/07/2018)

`செவ்வாய்க் கிரகத்தில் 1.5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏரிப் படலம்..!' - தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. `செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்று நம்புகிறோம்' என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

செவ்வாய்

அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், மனிதர்கள் வாழ்வதற்கானச் சூழல் செவ்வாய்க் கிரகத்தில் உள்ளதா என்று கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் வகையில், செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் குறித்து `நிலவில் மனிதர்கள் உயிர் வாழ்வதைவிட, சிவப்புக் கிரகமான செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியும்' என நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பிறகு சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கு, ஆதாரமாக அண்மையில் அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில் ஏரிப்படுக்கை போன்ற அமைப்பு இருப்பது தெரியவந்தது.  

இந்நிலையில், ஐரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சி, மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற திட்டத்தின் கீழ் மார்சிஸ் என்ற ராடார் கருவியை செவ்வாய்க்கு கடந்த 2003-ல் அனுப்பியது. தற்போது, செவ்வாய்க் கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவில், திரவ வடிவில் நீர் இருப்பது மார்சிஸ் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 1.5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்தத் திரவப் படலம் பணி சூழ்ந்து காணப்படுகிறது. சுமார் 3.6 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக உள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள், செவ்வாயில் மனிதன் வாழ்வதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்று நம்புகிறோம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.