``பாகிஸ்தான் தேர்தலில் இந்து வேட்பாளர் வெற்றி!'' - பிலாவல் பூட்டோ சர்தாரி கட்சியைச் சேர்ந்தவர்

பிலாவல் மகேஷ் குமார் மலானி

பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அந்நாட்டு தேசிய நாடாளுமன்றத் தேர்தலில் தர்பார்கர்-2 தொகுதியில் (என்.ஏ 222) போட்டியிட்ட மகேஷ் குமார் மலானி 19,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அல்லா-ஓ-அக்பர் ஹெரிக் என்பவரை தோற்கடித்தார். பல்வேறு கட்சிகள் மற்றும் கூட்டு அமைப்புகள் சார்பில் நிறுத்தப்பட்ட அல்லா-ஓ-அக்பர் தெரிக் 87,251 ஓட்டுகள் பெற்றார். மகேஷ் குமார் மலானி-க்கு 1,06,630 ஓட்டுகள் கிடைத்தன. பாகிஸ்தான், தேசிய நாடாளுமன்றத்துக்கு பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற, 'முதல் இந்து' என்ற பெருமையை மகேஷ் குமார் மலானி பெற்று சாதனை படைத்துள்ளார். 

ஏற்கெனவே, 2013-ம் ஆண்டு நடந்த சிந்த் சட்டமன்றத் தேர்தலில் தர்பார்க்கர்-3 தொகுதியில் நின்று மகேஷ் குமார் மலானி வெற்றி பெற்றிருந்தார். அதுவும் பொது தொகுதிதான். 2002-ம் ஆண்டு, பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தான், அதிபராக இருந்தபோது, பாகிஸ்தானில் நடைபெறும் செனட், மாகாணம், தேசிய நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்துக்களும் வாக்களிக்கலாம்; தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் ஏற்கெனவே, இந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தர்பார்கர் செனட் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பொதுத் தொகுதியில் கிருஷ்ண குமாரி என்ற பெண்  நின்று வெற்றி பெற்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!